கதறி அழுத காஷ்மீர் முதல்வர்.. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க கோருகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 42 அப்பாவிகளும், ராணுவத்தினரும் உயிரிழந்தது தொடர்பாக சட்டசபையில் பேசிக் கொண்டிருந்தகாஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கதறி அழுதார்.

இதற்கும் மேல் பொறுமையாக இருப்பதைக் கைவிட்டுவிட்டு உடனடியாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்க வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.

சட்டசபைக் கட்டடத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வேன் மூலம் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 42 பேர்இறந்தனர். கடும் காயமடைந்தவர்கள் இறந்து வருவதால் சாவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக இன்று கூடிய சட்டசபையில் முதல்வர் பரூக் அப்துல்லா பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே பலமுறை கண் கலங்கினார். அவர்பேசுகையில்,

இந்தியாவில் தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் தான் காரணம். இதில் சந்தேகமேயில்லை. பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க வேண்டும்.பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி ஒழிக்க வேண்டும்.

பொறுமைக்கு எல்லை உண்டு. எத்தனை காலம் தான் நாம் சோதனைகளைத் தாங்கிக் கொண்டிருப்பது. பல்லுக்குப் பல், கண்ணுக்குக் கண் என்றசெயல்பாட்டை இந்தியா ஆதரித்ததில்லை. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. பாகிஸ்தானை தாக்கியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சிக்கிக் கொண்டு காஷ்மீர் மக்கள் நசுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாடு (பாகிஸ்தான்) அப்பாவிகளைஅடித்துக் கொல்கிறது. இன்னொரு நாடு (இந்தியா) அதை சும்மா பார்த்துக் கொண்டிருக்கிறது.

தன் நாட்டின் மீது தாக்குதல் நடந்தவுடன் அமெரிக்கா திருப்பித் தாக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், நாம் 12 ஆண்டுகளாக தீவிரவாதிகளைத் தாக்கக்காத்துக் கொண்டிருக்கிறோம்.

ஜெயிஷ்-ஏ-முகம்மத், லக்ஷ்ர-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பல தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பணமும்,ஆயுதங்களும், பயிற்சியும் கொடுத்து இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கிறது. இந்தத் தீவிரவாதிகள் இங்கு எங்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நுழைந்துஎங்களை கொன்று குவித்து வருகிறார்கள்.

என்னைக் கொல்வதால் அவர்களுக்கு ஏதாவது லாபம் கிடைக்கும் என்றால் நானே எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் போகத் தயாராகஇருக்கிறேன். என்னை அவர்ள் சுட்டுக் கொல்லட்டும். ஆனால், இந்த மாநில மக்களை அமைதியாக வாழ விடுங்கள் என கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

பாகிஸ்தானுடன் அமைதியாக ஒற்றுமையாக வாழ நாம் முயன்றோம். பல வழிகளிலும் அமைதிக்காக பாடுபட்டோம். பாகிஸ்தானைத் தாக்கக்கூடாது என்று நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொண்டோம். நாங்கள் (காஷ்மீரிகள்) அடிமைகள் அல்ல. எங்கள் அடிமைத்ததனம் 1947ம் ஆண்டிலேயேமுடிந்துவிட்டது.

அமைதிக்காக நாங்கள் பிரார்திக்காத இடமே இல்லை. ஆனால், கடவுள் கருணை காட்ட மறுக்கிறான். பெண்கள், குழந்தைகள் கூட தினமும் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். எத்தனை சாவுகளை நாங்கள் பார்ப்பது என்றார் பரூக் அப்துல்லா.

பேசும்போது பலமுறை துக்கம் தாளாமல் அழுத முதல்வரைப் பார்த்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களும் கண் கலங்கினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற