ஆப்கான் முன்னாள் மன்னருக்கு பாகிஸ்தான் அழைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நீக்கப்படும் பட்சத்தில் அடுத்து அங்கு முன்னாள் ஆப்கானிஸ்தான மன்னர் முகம்மத் சகீர்ஷாவை ஆட்சியில் அமர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதையடுத்து அவரை பல ஐரோப்பிய அமைச்சர்களும்,தலிபான்களை எதிர்த்துப் போரிட்டு வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் எதிர்ப் படையினரின் பிரதிநிதிகளும் கடந்த பல நாட்களாகசந்தித்துப் பேசி வருகின்றனர்.

1973ம் ஆண்டில் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் இருந்து சகீர் ஷா ரோம் நகரில் தான் வசித்து வருகிறார்.

இந் நிலையில் உடனடியாக ஒரு தூதரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு சகீர் ஷாவை பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் கேட்டுக் கொண்டுள்ளார்.

இத் தகவலை இத்தாலி நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்ரெட்டா பொனிவர் தெரிவித்தார். பாகிஸ்தானில் பர்வேஸ்முஷாரபை சந்தித்துப் பேசிய பின்னர் நிருபர்களுடன் பேசிய அவர்,

ஆப்கானிஸ்தானில் தலிபான்களிடம் இருந்து ஆட்சி பறிக்கப்பட்டுவிட்டால் சகீர் ஷா அங்கு முக்கியப் பங்காற்ற முடியும் எனமுஷாரப் கருதுகிறார். அவர் மூலம் தான் ஆப்கானில்தானில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை பாகிஸ்தான் உணரஆரம்பித்துள்ளது.

உடனடியாக தனக்கு மிக வேண்டிய ஒரு நபரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு ஷாவிடம் கூறுமாறு முஷாரப் என்னிடம்கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு இத்தாலி அமைச்சர் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற