சென்னையில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) திடீரென கன மழை பெய்தது. இதனால்சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென் மேற்கு பருவமழை தீவிரமான காரணத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்துவந்தது.

சென்னையில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவுநேரங்களில் மழையும் பெய்து வந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை சென்னை நகரில் தி-டீ-ரெ-ன பலத்த மழைபெய்தது. இது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. கடந்த சில நாட்களுக்குமுன் பெய்த மழையும், தற்போது பெய்துள்ள மழையும் குடிநீர் பஞ்சத்தை ஓரளவுதீர்க்கும் என்று சென்னை மக்கள் மத்தியில் நம்பிக்கை நிலவுகிறது.

பலத்த மழை பெய்த காரணத்தால் சென்னை நகரின் பல இடங்களிலும் தண்ணீர்தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற