பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ரஷ்யர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ:

போர் அபாயம் நெருங்கிக்கொண்டிருப்பதை அடுத்து பாகிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள்,ஊழியர்களை அந் நாடு திரும்ப அழைத்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் உள்ள ரஷ்யர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்பிவிடுமாறும் ரஷ்யா கூறியுள்ளது.

இன்னும் சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் மக்கள்மத்தியிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதையடுத்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்கள் தூதரகங்களைச் சேர்ந்தமுக்கிய அதிகாரிகள் தவிர பிறரை இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டனர். அவர்கள் அம்ரிஸ்தரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவும் பாகிஸ்தானில் உள்ள தனது தூதரக அதிகாரிகளை தங்கள் நாட்டிற்குஅழைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் யாகோவென்கோ கூறுகையில்,

ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. இதனால்பாகிஸ்தான் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே அங்குள்ளஎங்கள் நாட்டுத் தூதரக அதிகாரிகள் மற்றும், அங்கு குடியேறிய ரஷ்ய மக்களை அழைத்துக்கொள்ள முடிவுசெய்துள்ளோம்.

இதற்காக இஸ்லாமாபாத்துக்கு இன்று (வியாழக்கிமை) ஒரு விமானம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற