சந்திரிகாவை அடக்க சட்டம் தயார்: ரணில் காஞ்சி வருகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நாளை சென்னை வருகிறார்.

தனிப்பட்ட பயணமாக வரும் அவர் காஞ்சி மடத்துக்குச் செல்கிறார். அங்கு ஜெயயேந்திரரைச் சந்தித்து ஆசி பெறுகிறார்.

தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.

சந்திரிகா அதிகார பறிப்பு சட்டம் தயார்:

இந் நிலையில் இன்று ரணில் தலைமையில் கூடிய அமைச்சரவை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் அதிகாரத்தைப் பறிக்கும்புதிய சட்டத்திற்கு வடிவம் கொடுத்துள்ளது.

இப்போது சந்திரிகா இங்கிலாந்தில் உள்ள நிலையில் அவர் இல்லாமலேயே முக்கிய சட்டத் திருத்தம் குறித்து அமைச்சரவைவிவாதித்து முடித்துவிட்டது. இங்கிலாந்தில் இருந்து அவர் காலையில் அனுப்பிய அவசர கடிதத்தில், நான் இல்லாமல் முக்கியசட்ட விஷயங்களைப் பேசக் கூடாது என்று கூறியிருந்தார்.

அதை அமைச்சரவை நிராகரித்துவிட்டது. எங்களுக்கு ஆணையிட உங்களுக்கு அதிகாரம் இல்லை என அமைச்சரவை பதில்தெரிவித்துவிட்டதாக அரசியல் சட்டத்துறை அமைச்சர் பெரிஸ் கூறினார்.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

செப்டம்பர் முதல் வாரத்தில் அதிபரின் அதிகாரத்தைப் பறிக்கும் இந்தச் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில்அறிமுகப்படுத்தப்படும். இந்தச் சட்டத்தின்படி தேசத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்து முடிவு செய்ய புதிய கமிட்டிஅமைக்கப்படும். இதனை சபாநாயகர் நியமிப்பார்.

இந்தக் கமிட்டியில் அனைத்து அரசியல் கட்சிகளும் அவர்களிடம் உள்ள எம்.பிக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடம் பெறுவர்.அமைச்சர்கள் நியமனம் குறித்து இந்தக் கமிட்டி தான் இனி அதிபருக்கும் பிரதமருக்கும் உத்தரவு பிறப்பிக்கும். இந்தக் கமிட்டின்உத்தரவை அதிபரால் நிராகரிக்க முடியாது. அவருக்கு அந்த அதிகாரம் இல்லை.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும்வரை அரசைக் கலைக்கவும் அதிபருக்கு அதிகாரம் இல்லை. இந்த அதிகாரத்தைபுதிய சட்டம் ரத்து செய்கிறது.

இந்தச் சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக வரும் 29ம் தேதி நாடாளுமன்றத்தில் அரசின் மீது நம்பிக்கைவாக்கெடுக்கும் தீர்மானத்தைக் கொண்டு வருவோம். எங்கள் அரசுக்கு 113 எம்.பிக்கள் ஆதரவு உள்ளது (மொத்த எம்.பிக்கள்225) என்றார் பெரிஸ்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற