For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.- கிருஷ்ணா சந்திப்பு: ஹெலிகாப்டர்கள், மத்திய கமாண்டோக்கள் உதவி கோர முடிவு

Google Oneindia Tamil News

டெல்லி:

வீரப்பனைப் பிடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது என தமிழக, கர்நாடக முதல்வர்கள் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று சந்தித்துப் பேசினார். சுமார் ஒரு மணிநேரம் நடந்த சந்திப்பில் இரு மாநில அதிரடிப் படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் தருவது என்றும், வீரப்பனைத் தேடஹெலிகாப்டர்களையும், காட்டுப் பகுதியில் பயிற்சி பெற்ற கமாண்டோக்களையும் வழங்குமாறு மத்திய அரசிடம் கோருவது என்றும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மிகவும் சுமூகமான சூழலில் இந்தச் சந்திப்பு நடந்ததாக இரு மாநில அதிகாரிகளும் தெரிவித்தனர். நேற்று தான் கர்நாடக அதிரடிப் படையின்தலைவரை மாற்றியது தொடர்பாக கிருஷ்ணாவை ஜெயலலிதா குறை கூறிப் பேசினார் என்பது நினைவுகூறத்தக்கது.

கிருஷ்ணா பேட்டி:

கூட்டம் முடிந்த பின்னர் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறுகையில், இந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் நடந்தது. இதுவரைஇப்படி சுமூகமாக நாங்கள் பேசிக் கொண்டதே இல்லை. ஜெயலலிதாவின் அணுகுமுறை மிகவும் ஆக்கப்பூர்மாக இருந்தது. இந்தவிவகாரத்தில் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார்.

காட்டுப் பகுதியில் உளவு பார்க்க வசதியாக சில கருவிகளையும் மத்தியப் படைகளின் உதவியையும் கோரலாம் என்றுமுடிவெடுத்திருக்கிறோம். இது தொடர்பாக இருவரும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவோம்.

என்னைப் பற்றி ஜெயலலிதா நேற்று தெரிவித்த கருத்துக்களை மறந்துவிட விரும்புகிறேன். வீரப்பனிடம் வந்த கேசட்டில் இருமாநிலங்களையும் குறை கூறியிருக்கிறான். கடந்த இரண்டரை ஆண்டுகளில் அவனிடம் இருந்து வந்த எல்லா கேசட்டுகளிலும் ஏதாவது ஒருகுறையை கூறிக் கொண்டு இருந்திருக்கிறான் என்றார் கிருஷ்ணா.

ஹெலிகாப்டர்கள் கோரும் தமிழகம்:

இந் நிலையில் வீரப்பன் இருக்கும் காட்டுப் பகுதியை அலச உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், செயற்கோள் உதவியைக் கோரதமிழகம் முடிவு செய்துள்ளது. மேலும் காட்டுப் பகுதி தாக்குதலில் பயிற்சி பெற்ற பாரா மிலிட்டரிப் படை கமாண்டோக்களையும் அனுப்பிவைக்குமாறு கோர ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

கர்நாடக போலீஸ் விடுமுறை ரத்து:

இதற்கிடையே இன்று காலை தமிழக, கர்நாடக அதிரடிப் படையின் தலைவர்களும் காவல்துறை அதிகாரிகளும் மாதேஸ்வரன் மலைப்பகுதியில் சந்தித்து 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

வீரப்பனைப் பிடிக்க முழு அளவில் தேடுதல் வேட்டை நடத்துவது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காட்டுப் பகுதிக்கு கூடுதல்போலீசாரை அனுப்புவதற்கு வசதியாக கர்நாடக அதிரடிப்படையில் முன்பு பணியாற்றிய அனைத்து டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள்,போலீசார் ஆகியோர் மீண்டும் உடனடியாகப் அதிரடிப்படை பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் கர்நாடக அதிரடிப் படையில் பணியாற்றிவிட்டு மாநில காவல்துறை பணிக்குத் திரும்பிவிட்டவர்கள். இப்போது அவர்கள் திரும்பஅழைக்கப்படுகின்றனர். மேலும் இப்போது விடுமுறையில் சென்றுள்ள இந்த போலீசாரும் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் எனஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காட்டுக்குள் நுழையும் தமிழக போலீஸ்:

அதே போல தமிழக அதிரடிப்படைக்கு உதவியாக ஆயிரக்கணக்கான போலீசார் காட்டுப் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். எரியூர்,அஞ்செட்டி, பெண்ணாகரம், ஓசூர் காட்டுப் பகுதிக்கு போலீசார் அனுப்பப்பட்டுள்ளதாக தர்மபுரி மாவட்ட எஸ்.பி. பெரியய்யாதெரிவித்தார்.

அதே நேரத்தில் கொளத்தூர், பெரிய தண்டா, சின்ன தண்டா, தர்காடு ஆகிய காட்டுப் பகுதிகளுக்கு சேலம் மாவட்ட போலீஸ் படைகள்போலீஸ் படைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதனை சேலம் எஸ்.பி. மாகாலி உறுதி செய்தார்.

நாகப்பா கடத்திச் செல்லப்பட்ட சாம்ராஜ்நகர்- சத்தியமங்கலம் காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள குண்டால் என்ற மலைப் பகுதியில் தான்வீரப்பன் கும்பல் மறைந்திருப்பதாக இரு மாநில உளவுப் பிரிவினரும் கருதுகின்றனர்.

இதையடுத்து இந்தப் பகுதியை முற்றுகையிடுவது குறித்தும், இங்கிருந்து செல்லும் வழிகளை அடைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில்விவாதிக்கப்பட்டது.

தேவாரம்- கர்நாடக டி.ஜி.பி. ஆலோசனை:

இன்று காலை மாதேஸ்வரன் மலைப் பகுதியில் காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அதிரடிப் படையின் முகாமுக்கு தேவாரம் வந்தார்.சிறிது நேரத்தில் கர்நாடக மாநில டி.ஜி.பி. பாஸ்கர், கூடுதல் டி.ஜி.பி. சுபாஷ் பரணி ஆகியோர் வந்தார். பின்னர் இப்போதைய கர்நாடகஅதிரடிப்படையின் தலைவர் சர்மா, முன்னாள் தலைவர்களான சங்கர் பித்ரி, கெம்ப்பையா ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

இவர்கள் காட்டுப் பகுதியின் வரைபடங்களை வைத்துக் கொண்டு சுமார் 3 மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர்.

(இதில் சங்கர் பித்ரி கர்நாடக அதிரடிப் படையின் தலைவராக இருந்தபோது தான் அப்பாவித் தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகக்குற்றச்சாட்டு உள்ளது. இவர் மீது சதாசிவம் கமிஷன் முன் ஆஜரான அப்பாவி ஆண்களும், பெண்களும் கடும் குற்றச்சாட்டுகளைசுமத்தியதுகுறிப்பிடத்தக்கது.

இவர் மீது வீரப்பனும் கடும் கோபத்தில் இருந்து வருகிறான். தனது அனைத்து பேட்டிகளிலும் பித்ரியை வீரப்பன் திட்டாமல் இருந்ததில்லை.)

காட்டுப் பகுதியில் வீரப்பன் மறைந்திருக்கலாம் என்று கருதப்படும் இடங்களை உடனடியாக சுற்றி வளைக்கவும் கூடுதல் படையினரைகாட்டுப் பகுதிக்கு வரவழைக்கவும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கூடுதல் டி.ஜி.பி. பேட்டி:

இது குறித்து குண்டால் பகுதியில் இருந்த சுபாஷ் பரணி கூறுகையில், இந்த முறை வீரப்பனின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதில்லைஎன்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். அவனைப் பிடிக்க அதிக அளவிலான போலீஸ் படை காட்டுக்குள் அனுப்பப்படும்.

இதற்கு வசதியாக விடுப்பில் உள்ள அனைத்து டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உடனடியாகப்பணிக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை வீரப்பன் தப்பிவிட முடியாது என்றார்.

மாலை காவிரி ஆணையக் கூட்டம்:

இந் நிலையில் இன்று மாலை பிரதமரின் இல்லத்தில் தமிழக முதல்வர் ஜெயலலலிதா, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கலந்து கொள்ளும்காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் நடக்கிறது. வீரப்பன் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கும் இடையே ஒற்றுமை ஏற்பட்டுவிட்டாலும் கூடகாவிரி விஷயத்தில் மோதல் வெடிக்கப் போவது நிச்சயம்.

தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது என்ற கர்நாடகத்தின் நிலையில் நேற்று வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இப்போதுள்ளசூழ்நிலையில் தமிழகத்தை எடுத்தெறிந்து பேசும் நிலையில் கர்நாடகம இல்லை. இதனால் பிரதமர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில்கர்நாடகத்தின் நிலையில மாற்றம் ஏற்படலாம் என்று தமிழகம் நம்புகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X