For Daily Alerts
Just In
மதுரை உயர்நீதிமன்ற கிளை விரைவில் செயல்படும்: ஜனா தகவல்
சென்னை:
நாடாளுமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்ட பிறகே மதுரை உயர்நீதிமன்றக் கிளை செயல்படத் தொடங்கும்என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை அமைக்கும் பணிகள் இன்னும் முடியவில்லை. பணிகள் முடிந்ததும், சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமிருந்து எனக்கு கடிதம் அனுப்பப்படும்.
அதன் பிறகு கிளை துவக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அதன்பிறகே உயர்நீதிமன்றக் கிளை இயங்குவது தொடர்பான அறிவிப்பை மத்தியஅரசு வெளியிடும்.
இந்தப் பணிகளில் இடையூறு ஏதும் இல்லை, விரைவில் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை செயல்படஆரம்பிக்கும்.
-->


