For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

32,000 பஸ் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு: அரசு பகிரங்க அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்குவதால் 32,000 போக்குவரத்து ஊழியர்கள் பணியிழக்க நேரிடும்என்று உறுதியாகத் தெரிய வந்துள்ளது. உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோடா இதை குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

பத்திரிகைச் செய்திகள், சில அரசியல் தலைவர்கள் கூறுவது போல 60,000 பேர் வேலை இழக்க மாட்டார்கள்.சுமார் 32,000 பேர் மட்டுமே வேலை இழப்பார்கள். அவர்களுக்கும் கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டம்அமல்படுத்தப்படும், எனவே போக்குவரத்து ஊழியர்கள் பயப்படத் தேவையில்லை.

நஷ்டம் தரக் கூடியதாக கணிக்கப்பட்டுள்ள 16,000 பஸ் ரூட்களில் 4,000 ரூட்கள் ஏற்கனவே தனியாரிடம்உள்ளது. அதில் மேலும் 4,000 ரூட்கள் தனியாருக்கு வழங்கப்படும்.

டென்டர் முறையில் ரகசியமோ ஒளிவுமறைவோ இருக்காது. அதிக தொகை வழங்கும் நிறுவனத்திற்கே பஸ் ரூட்வழங்கப்படும். ஏதாவது ஒரு பஸ் ரூட்டை வாங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் அந்த ரூட்டை அரசாங்கமேதொடர்ந்து இயக்கி வரும்.

தனியார்மயமாக்கலால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ளப்படும். மாணவர்களுக்கானஇலவச பஸ் பாஸ் திட்டம் தனியார் மயமாக்கலுக்குப் பிறகு தனியார் பஸ்களிலும் தொடரும்.

இதை ஒரு நிபந்தனையாக டெண்டரில் குறிப்பிட உள்ளோம். அதனால் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு ஏற்படும்நஷ்டத்தை அரசு ஈடு கட்டும்.

தனியார்மயாகும் பஸ் ரூட்களை அடையாளம் காணுவது, பொதுமக்களிடம் கருத்து கேட்பது உள்ளிட்ட பணிகள்ஜனவரி மாதம் வரை நடைபெறும். அதன் பிறகு டெண்டர் விடுவது உள்ளிட்ட பணிகள் துவங்கும் என்றார் முனீர்ஹோடா.

x uĀ APmkPЦlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X