ரயில் நிலைய ஆட்டோக்களை சோதனையிட உத்தரவு: கொள்ளையடிக்கும் டிரைவர்களுக்கு ஆப்பு
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இயங்கும் பிரீ பெய்ட் ஆட்டோ மற்றும் டாக்சிகளில் திடீர் சோதனைநடத்தி, முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்திஉத்தரவிட்டுள்ளார்.
சென்டிரல் ரயில் நிலையம் உள்பட தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் பெரும்பாலானவற்றில் முன் கூட்டியேகட்டணம் செலுத்தி ஆட்டோ அல்லது டாக்சியில் செல்லும் வசதி உள்ளது.
ஆனால், பல ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், பயணிகளை இறக்கி விட்டுவிட்டு கூடுதல் கட்டணம் கேட்டு தொல்லைதந்து வருகின்றனர். இதனால் ஊருக்கு வந்து இறங்கும்போதே இவர்களுடன் தகராறுடன் செய்து மூட்-அவுட்ஆகும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து இத் திட்டத்தில் முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி ரயில்வே அதிகாகளுக்குமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். தொல்லை தந்த ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளிடம்நேரடியாக புகார் தரலாம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு வரும் புகார்கள் மீது அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.வெல்டன் மூர்த்தி!


