For Daily Alerts
Just In
பலூன் வியாபாரியின் கேஸ் சிலிண்டர் வெடித்து 4 குழந்தைகள் காயம்: ஒரு பெண் கவலைக்கிடம்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பலூன் வியாபாரி வைத்திருந்த கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 4 குழந்தைகள் உள்பட 9பேர் காயமடைந்தனர். இதில் ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பலூன்களில் சிலிண்டெர் மூலம் காற்றை அடைத்து விற்றுக் கொண்டிருந்தவரிடம் பலூன் வாங்க ஏராளமானகுழந்தைகள் கூடினர். அவர்களது பெற்றோர் சிலரும் உடனிருந்தனர்.
அப்போது அந்த சிலிண்டெர் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 4 குழந்தைகள் அந்த இடத்தில் இருந்து தூக்கிஎறியப்பட்டு காயமடைந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தார். அவர்கள் அனைவரும் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
இதில் ஒரு பெண்ணின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

