• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் பிசுபிசுத்துப் போன விஎச்பி பந்த்

By Staff
|

சென்னை:

சங்கராச்சாரியாரின் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விஸ்வ இந்து பரிஷத் விடுத்த பந்த் அழைப்புக்கு தமிழகத்தில் சுத்தமாகஆதரவு கிடைக்கவில்லை.

பந்த் நடப்பதாக டிவியில் நியூஸ் பார்த்தே மக்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கே பந்த்தின் பாதிப்பு இருந்தது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல் திறந்திருந்தன. பள்ளி, கல்லூரிகள் தீபாவளி விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன. இதனால்அவை கடந்த இரு நாட்களாகவே இயங்கவிலலை. தனியார் அலுவலங்கள், சனிக்கிழமைகளில் இயங்கும் அலுவலகங்கள் அனைத்தும்வழக்கம்போல் இயங்கின.

பஸ்கள், ரயில்கள் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது. எங்கும் அசம்பாவித சம்பவமும் இல்லை.

தொகாடியா தலைமையில் போராட்டம்:

இன்று மட்டுமில்லாமல் நாளையும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது வி.எச்பி. தேசிய அளவில் பந்த் நடத்தவும் அக் கட்சிஅழைப்பு விடுத்துள்ளது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன் திங்கள்கிழமை நடக்கும் போராட்டத்துக்கு வி.எச்.பியின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீன்தொகாடியாவும் பங்கேற்கிறார்.

ஜெ: அமைதி காக்கும் வி.எச்.பி.

இந் நிலையில் இன்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் பேசிய வி.எச்.பியின் தலைவர் அசோக் சிங்கல்,

சங்கராச்சாரியாரை விடுவிக்க ஜனாதிபதி அப்துல் கலாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கைதுக்கு நாங்கள் நிச்சயம் பழிவாங்குவோம். சோம்நாத் கோவில் மீது பல நூறு ஆண்டுகளுக்கு நடந்த தாக்குதல் மாதிரி, சங்கராச்சாரியார் மீது இன்று தாக்குதல்நடந்துள்ளது. இந்து இந்து மதத்தின் மீதான தாக்குதல்.

இந்தக் கைதை கண்டித்து நாளை தேசம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும். இந்து மதத்துக்கு எதிரான சக்திகளைக் கொண்ட(திமுக) மத்திய அரசும் இந்தக் கைதை தடுக்கவில்லை.

இன்னொரு தலைவரான விஷ்ணு ஹரி டால்மியா பேசுகையில், கம்யூனிஸ்ட்டுகளின் தயவுடன் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசுக்குசன்யாசிகளை மதிக்கத் தெரியவில்லை என்றார்.

இந்த இருவருமே சங்கராச்சாரியாரைக் கைது செய்த தமிழக அரசுக்கு எதிராகவே முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகவோ எந்தக் கருத்தும்தெரிவிக்கவில்லை.

கொச்சியில் உண்ணாவிரதம்:

சங்கராச்சாரியாரின் கைதை எதிர்த்து கேரள மாநிலம் கொச்சியில் 21 இந்து அமைப்புகளின் சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம்நடக்கிறது.

இந்தப் போராட்டத்தில் கேரள பிராமண சபாவும் பங்கேற்றுள்ளது.

ஆந்திராவில் போராட்டம்:

சங்கராச்சாரியாரின் கைதை கண்டித்து ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் தர்ணா போராட்டமும் பேரணியும் நடந்தது. இங்குள்ள மடத்தில்வைத்துத் தான் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூங்கிக் கொண்டிருந்த சங்கராச்சாரியாரை எழுப்பு இழுத்துச் சென்றுள்ளது தமிழக போலீஸ் என தர்ணா போராட்டத்தில் பேசியவர்கள்கூறினர்.

கருணாநிதி கொடும்பாவி எரிப்பு:

இதே போல விஜயவாடாவிலும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. இந்து மகா சபா அமைப்பினர் சாலை மறியல் நடத்தினர். இதைத் தொடர்ந்துதிமுக தலைவர் கருணாநிதியின் கொடும்பாவியை எரித்தனர்.

புனேவில்..

புனேவில் இந்து ஜன சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த பெண்கள் சங்கராச்சாரியார் கைதை எதிர்த்து ஊர்வலம் நடத்தினர்.

கர்நாடக பிராமண சபை எதிர்ப்பு:

சங்கராச்சாரியாரின் கைதுக்கு அகில கர்நாடக பிராமண மகா சபாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டஅறிக்கையில், கர்நாடகத்தின் ஒட்டு மொத்த பிராமண, இந்து சமுதாயமும் இந்தக் கைதால் அதிர்ச்சியடைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஜெவுக்கு இந்து ஓட்டு இல்லை: ராம.கோபாலன்:

இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராம.கோபாலன் கூறுகையில், ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.அவர் சாதாரண குற்றவாளிகளைப் போல தலைமறைவாகிவிட மாட்டார் என்பது அரசுக்குத் தெரியும்.

இருந்தாலும் இப்படி இரவோடு இரவாக கைது செய்துள்ளார்கள். வீரப்பன், அது இது என்று நல்ல பெயர் எடுத்து வந்த ஜெயலலிதாதிடீரென இப்படிச் செய்துவிட்டார். இனிமேல் ஜெயலலிதாவுக்கு இந்துக்கள் யாரும் ஓட்டு போட மாட்டார்கள்.

ஜெயேந்திரர் விடுதலைக்காக வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை கோவில்களில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

இதே போல ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தமிழகத் தலைவர் மாரிமுத்துவும் ஜெயேந்திரரின் கைதுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் செயல் என்று கூறியுள்ளார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X