For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீடியோவை காட்டி சொர்ணமால்யாவிடம் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

Swarnamalya with her Parentsஜெயேந்திரருடான தொடர்பு குறித்து நடிகை சொர்ணமால்யாவிடம் காஞ்சிபுரம் போலீஸார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.பல வீடியோக்களை போட்டுக் காட்டி சொர்ணாமால்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நடிகை சொர்ணமால்யாவுக்கும் சங்கர மடத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. மேலும்,காண்டிராக்டர் ரவி சுப்ரமணியத்துக்கும், சொர்ணமால்யாவுக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்ததாகவும் செய்திகள் கசிந்தன.

சொர்ணமால்யாவுக்கும் அவரது கணவர் அர்ஜூனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, ரவிசுப்ரமணியம் அப்பிரச்சினையை சங்கரமடத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும், சங்கர மடத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் சொர்ணமால்யாவிடமிருந்து அர்ஜூன்பிரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ரவி சுப்பிரமணியத்துக்கு மிகவும் நெருக்கமானார் சொர்ணா.

இதையடுத்து சொர்ணமால்யாவை விசாரிக்க காஞ்சிபுரம் போலீஸார் முடிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறுசொர்ணமால்யாவுக்கு எஸ்.பி. பிரேம்குமார் சம்மன் அனுப்பினார்.

இந் நிலையில் சொர்ணமால்யா தனது பெற்றோருடன் காஞ்சிபுரம் வந்தார். உடன் வழக்கறிஞர் ஒருவரும் வந்தார்.

அங்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள தனி பங்களாவில் வைத்து சொர்ணமால்யாவிடம் எஸ்.பி. பிரேம்குமார்,எஸ்.பி. வரதராஜூலு உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ரவி சுப்பிரமணியத்துடனான நெருக்கம், காஞ்சி மடத்துடனான தொடர்பு, பிளாட் வாங்க ரவி மூலம் மடத்தில் இருந்து பணம் கிடைத்ததா,உங்களை வைத்து படம் தயாரிப்பவர்களுக்கு மடத்தில் இருந்தோ ரவி அல்லது அப்பு மூலமோ பைனான்ஸ் செய்யப்பட்டதா, மடத்துக்குநிகழ்ச்சிகளிலும், இளையவரும் பெரியவரும் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டது ஏன் போன்ற கேள்விகளால்துளைத்தெடுக்கப்பட்டார் சொர்ணமால்யா.

Swarnamalya விசாரணை மிகக் கடுமையாக இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 2 மணி நேரம் நடந்த விசாரணைக்குப்பின்னர் கறுத்துப் போன முகத்துடன் சொர்ணமால்யா வெளியே வந்தார்.

அவருக்காக காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், பத்திரிக்கைகளில் என்னைப் பற்றி வந்த வதந்திகள் குறித்துத்தான் விளக்கம்கேட்டார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் கொடுத்துள்ளேன்.

வேறு எதைப் பற்றியும் அதிகாரிகள் கேட்கவில்லை. மீண்டும் விசாரணைக்கு வருமாறு உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை. என்னைப் பற்றிபத்திரிக்கைகளில் வரும் அவதூறு செய்திகள் மீது நான் நடவடிக்கை எடுக்கப் போவது இல்லை. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறிய சொர்ணமால்யா உடனே காரில் ஏறி சென்னை கிளம்பினார்.

விசாரணையின்போது சில சிடிக்களைப் போட்டுக் காட்டு சொர்ணமால்யாவிடம் பிரேம்குமார் விசாரணை நடத்தியுள்ளார். அந்தசிடிக்களில் ரவி சுப்ரமணியத்துடன் சொர்ணமால்யா இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததாகத் தெரிகிறது.

காவல் நிலையத்தில் சிடி பிளேயர் இல்லாததால் தனது வீட்டில் இருந்து சிடி பிளேயரையும் போர்ட்டபிள் டிவியையும் கொண்டு வரச்செய்தார் எஸ்.பி. பிரேம்குமார்.

ரவி மற்றும் மடத்தில் இருந்து சொர்ணமால்யாவுக்கு வந்த கார், பிளாட் மற்றும் இன்னபிற வசதிகள் குறித்த விவரங்களை போலீசிடம்போட்டுவிட்டது அவரது முன்னாள் கணவர் தரப்பினர்தான் என்கிறார்கள். அடியாட்களை வைத்து மிரட்டி தன்னிடம் இருந்து பிரிந்தசொர்ணமால்யாவுக்கு நேரம் பார்த்து அவர் ஆப்பு வைத்ததாக சொல்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X