For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக எம்பி தொகுதிகளில் மறு தேர்தல் தேவையில்லை- பாஜக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் மக்களவையின் 39 தொகுதிகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என பா.ஜ.க. கூறியுள்ளது.

அரசு அதிகாரிகளின் சதியால் தான் கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அதிமுக தோற்றதாகவும், இதனால்மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டமன்றத்தில்அறிவித்தார்.

அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு குறித்து பா.ஜ.க. மாஜி தலைவர் வெங்கையாநாயுடு இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:

இங்கு மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்ட முறை குறித்து பல கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், அதற்காக மறு தேர்தல் நடத்தவேண்டிய அவசியமில்லை. நாங்கள் மக்களின் தீர்ப்பை ஏற்று எதிர்க் கட்சியாக அமர்ந்திருக்கிறோம். நாங்கள் அடுத்த தேர்தலுக்குத்தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

கோவாவில் பாஜக ஆட்சியை கவிழ்த்துவிட்டு புதிய காங்கிரஸ் முதல்வரை நள்ளிரவில் பதவியேற்க வைத்ததன் மூலம் கவர்னர் ஜமீர்நள்ளிரவு ஜனநாயப் படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார். அவரை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

திட்டமிட்டு சதி செய்து பாஜக அரசை நீக்கியுள்ளார்கள். மாநில அரசுகளைக் கலைக்கும் தனது பழைய பழக்கத்தை காங்கிரஸ் மீண்டும்கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அடுத்து உத்தரப் பிரதேசத்திலும் முலாயம் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்க்கலாம் என்றார் நாயுடு.

இந்துக்களின் எதிரி ஜெயலலிதா:

இந் நிலையில் கலவையில் ஜெயேந்திரரை சந்தித்த ஹரியானா மாநில பாஜக தலைவர் ஹரியந்த் குமார் நிருபர்களிடம் பேசுகையில்.

ஜெயேந்திரரையும் விஜயேந்திரரையும் கைது செய்ததன் மூலம் முதல்வர் ஜெயலலிதா பெரும் தவறு செய்து விட்டார். கோடிக்கணக்கானஇந்து மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். இந்துக்களுக்கு நிரந்தர எதிரியாகி விட்டார். இதற்கான விளைவு தமிழகத்தில் வரும்சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும். தமிழக மக்கள் இதை மறக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா இதற்கு முன்பு செய்த நல்ல காரியங்கள் மூலம் கிடைத்த புண்ணியங்களை சங்கராச்சாரியார்களை கைது செய்ததன் மூலம்இழந்து விட்டார்.

பொய் வழக்குகளைப் போடுவது தமிழக அரசுக்கும் போலீஸாருக்கும் கைவந்த கலையாகி விட்டது.

சங்கரராமன் கொலை வழக்கு மட்டுமே சங்கராச்சாரியார்கள் கைதுக்கு காரணமல்ல. வேறு ஏதோ ஒன்றை மனதில் வைத்துத்தான்ஜெயலலிதா அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளார். அது என்ன என்பது ஜெயேந்திரருக்கும், ஜெயலலிதாவுக்கும் மட்டுமே தெரியும்என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X