For Daily Alerts
Just In
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை
சென்னை: சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிப்பூரை சேர்ந்தவர் சந்தீப்(20). தனியார் மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் இவர், சரியாக கல்லூரிக்கு செல்லாத காரணத்தால் கல்லூரி நிர்வாகம் அவரை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
இதனால் மனம் உடைந்த சந்தீப் தங்கியிருந்த வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.