பெங்களூர் தினத்தந்தி அலுலவகம் சூறை

பெங்களூர் ராஜாஜி நகர், 6வது பிளாக், டாக்டர் ராஜ்குமார் சாலையில் தினத்தந்தி அலுவலகம் உள்ளது.
பெங்களூரில் கன்னட அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு கடந்த 3 நாட்களாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 வாகனங்களில் போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் இன்று அங்கு 30க்கும் மேற்பட்ட கன்னட ரகச்ன வேதிகே அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். தினத்தந்தி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெயர்ப் பலகையை அடித்து உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த காகிதச் சுருள்களை சேதப்படுத்தினர்.
இத்தனை நடந்தும் பாதுகாப்புக்காக இருந்த போலீஸார் சற்றும் ரியாக்ஷன் காட்டாமல் சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
சற்று நேரம் பேயாட்டம் ஆடிய கன்னட அமைப்பினர் இனிமேல் தமிழில்ப் பெயர்ப் பலகை வைக்கக் கூடாது, நாளையிலிருந்து பேப்பர் வரக் கூடாது என்று எச்சரித்து விட்டுச் சென்றனர்.