For Daily Alerts
Just In
ஹெலிகாப்டரில் கோளாறு - தப்பினார் வசுந்தரா ராஜே சிந்தியா
ஓம்காரேஸ்வர் (ம.பி.): மத்தியப் பிரதேச மாநிலம் ஓம்காரேஸ்வர் நகருக்கு வந்த ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா பயணித்த ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டு அது வயலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வசுந்தரா உள்ளிட்டோர் எந்தவித ஆபத்தும் இல்லாமல் தப்பினர்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, ஓம்காரேஸ்வரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அதை முடித்து விட்டு இச்சாபூர் என்ற ஊரில் உள்ள கோவிலுக்கு அவர் ஹெலிகாப்டரில் கிளம்பினார்.
கிளம்பிய சில நொடிகளிலேயே ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அருகில் உள்ள வயலில் ஹெலிகாப்டரை இறக்கினார் பைலட்.
ஹெலிகாப்டரில் இருந்த வசுந்தரா உள்ளிட்டோர் எந்தவிதக் காயமும் இன்றி தப்பினர். பின்னர் இச்சாபூருக்கு கார் மூலம் பயணித்தார் வசுந்தரா.