அந்தமானில் மாட்டிக் கொண்ட பயணிகள் இன்று மீட்கப்பட்டனர்
சென்னை: வெள்ளம் காரணமாக அந்தமான் விமானநிலையத்தில் மாட்டிக்கொண்ட 400 பயணிகளை மீட்கும் பணி இன்று தொடங்கியது.
அந்தமானில் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை கடும் மழை பெய்தது. ஒருசில மணிநேரத்தில் 207 மி.மீ. மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் வெளளத்தில் மூழ்கியது. இதனால் போர்ட்பிளேர் விமானநிலையத்துக்குள் மழை வெள்ளம் புகுந்தது. அங்கிருந்து சென்னைக்குச் செல்லவிருந்த ஏர்இந்தியா மற்றும் ஏர் டெக்கான் விமானங்கள் புறப்பட முடியாமல் நிறுத்தப்பட்டன. கொல்கத்தாவில் இருந்து வந்த 3 விமானங்களும் திருப்பிவிடப்பட்டன.
இதனால் சென்னை உள்பட நாட்டின் பல்வேறு பகுதிக்கு திரும்பிச் செல்லவேண்டிய சுமார் 400 பயணிகள் பரிதவித்தனர். இந்நிலையில் விமானநிலையத்தில் ஓரளவு வெள்ளம் வடிந்ததால் விமான சேவையை மீண்டும் துவக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். விமானநிலையத்தில் காத்துக்கிடக்கும் பயணிகளை சென்னைக்கு கொண்டுசெல்லும் பணியை மேற்கொண்டனர்.