For Daily Alerts
Just In
மாநில தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் மறு நியமனம்
சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளராக சந்திரசேகரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்போது மாநில தேர்தல் ஆணையாளராக உள்ள இவரது பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந் நிலையில் அவர் மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அரசின் இந்த உத்தரவுக்கு ஆளுநர் பர்னாலா அனுமதி அளித்ததையடுத்து இந்த நியமனம் தொடர்பான உத்தரவை தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டது.
மேலும் இரு ஆண்டுகளுக்கு சந்திரசேகரன் இந்தப் பதவியில் நீடிப்பார்.