ஸ்வைன் ப்ளூ-கிருஸ்துவ கல்லூரி மூடல், சத்யபாமா மாணவருக்கும் அறிகுறி

இந்தக் கல்லூரியைச் சேர்ந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரான சத்யசனத்சன் (19) தனது ஊருக்குப் போய்விட்டுத் திரும்பி வந்த பிறகு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன.
அதே போல சத்யபாமா பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. இதையடுத்து இருவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த கோஷ் (21) சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.டெக். இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் சேலையூர் கேம்ப்ரோடு, ஜார்ஜ் அவென்யூவில் நண்பர்கள் 10 பேருடன் தங்கி இருக்கிறார். இவருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இலங்கையில் இருந்து சென்னை வந்த வங்கதேச தொழிலதிபர், சிங்கப்பூரிலிருந்து வந்த புதுக்காட்டை வாலிபர் ஆகியோருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்கள் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மீனம்பாக்கம் விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு கொழும்பில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் வந்த வங்கதேசத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆலம் உசேன்(39),
கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த விமல்ராஜ் (22) ஆகியோருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பலி 30 ஆனது..
இந் நிலையில் புனேயில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். இதனால் இந்தியாவி்ல் இந்த நோய்க்கு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.