For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி-ஸ்டாலின் பொறுப்புகள் என்னென்ன?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது கட்டுப்பாட்டின் கீழ் வரும் பணிகள், பொறுப்புகள் என்ன என்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

முதல்வரின் பொறுப்புகள்

அமைச்சரவை கூட்ட ஏற்பாடுகள், கொடியேற்று விழா, இந்திய ஆட்சிப் பணி, ஓய்வூதியம், மாநில பாதுகாப்பு, அரசியல் குற்றங்கள், அமைச்சர்களுக்கான பொறுப்புகள் ஒதுக்கீடு, அமைச்சர்கள் நியமனம், அரசு விமானம் மற்றும் ஹெலிகாப்டர், சம்மன், சட்டமன்றத்தை கூட்டுதல் மற்றும் கலைத்தல், சட்டமன்ற விதிகள்,

அமைச்சர் அலுவலக ஊழியர்கள், அரசியல் குற்ற நடவடிக்கைகள், சாதி, மத பிரச்சினைகள், குண்டர் சட்டம், பயங்கரவாத செயல்கள் தடுப்பு, கள்ளச்சாராயம், போதை மருந்துகள், வனக்குற்றங்கள், விபசாரம், மணல் கடத்தல், திருட்டு வீடியோ போன்ற குற்றத் தடுப்பு, வெளி விவகாரங்கள், இந்திய பாதுகாப்பு, பொது அமைதி, கைதிகள் மற்றும் குற்றவாளிகள் பரிமாற்றம், ராணுவம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், வீரதீர விருதுகள், முப்படையின் பணிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், கவுரவ விருதுகள், பிற மாநில உறவுகள்,

துணை முதல்வரின் பொறுப்புகள்

இந்திய குடிமைப் பணி அதிகாரிகள் தவிர்த்த சிவில் பிரதிநிதிகள், பொது ஆலோசனைக்குழு, குழுக்கள் மற்றும் கருத்தரங்குகள், மாவட்ட நீதிபதிகள், கீழ்நிலை பணியாளர்கள், தினக்கூலி ஊழியர் பணிவரன்முறை, குற்ற மேல்முறையீடுகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், பொதுத் துறை பிரிவு அதிகாரிகள், உதவி பிரிவு அதிகாரிகள், உதவியாளர்கள், சுருக்கெழுத்தர்-தட்டச்சர்கள், கருணை அடிப்படை பணி நியமனம், தியாகிகள் ஓய்வூதியம், அரசு விருந்தினர் இல்லம், விடுமுறைகள், மனித உரிமைகள், சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை ஆகியவற்றுக்கு அட்வகேட் ஜெனரல், சட்ட அதிகாரிகள் நியமனம், அவர்களுக்கான சிறப்பு கட்டணம்,

சட்டப்பேரவை செயலகம், அரசு ஊழியர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், எந்த துறைக்கும் ஒதுக்கப்படாத பொதுவான பணிகள், ரகசிய அறிக்கைகள், அரசியல் மற்றும் நிர்வாகம் பற்றிய முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், தலைமைச் செயலகம், பொதுத்துறை (தபால்), மத்திய ஆவணப் பிரிவு, நூலகம், மாநில விழாக்கள், நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடங்கள், பொது சொத்து பாதுகாப்பு,

முப்படை அதிகாரிகள் வருகை, சிவில் பாதுகாப்பு சட்டங்கள், ராணுவத்திற்கான நில ஆர்ஜிதம், மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதவியேற்பு விழாக்கள், சிறப்பு தபால்தலைக்கான பரிந்துரை, வெளிநாட்டவர், ரெயில்வே நிலங்கள் அதிகாரவரம்பு, வெளிநாட்டு தூதர்கள், இந்திய, வெளிநாட்டு போர்ப்படை கப்பல்கள், பிற மாநில கவர்னர்கள், உயர் அதிகாரிகள்.

முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொறுப்புகள்:

வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு தொடர்புகள், வெளிநாட்டு முக்கிய பிரமுகர்கள், தூதர்கள், வர்த்தக பிரதிநிதிகள், வெளிவிவகாரம் தொடர்புடைய கைதிகள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வருகை.

இவ்வாறு அரசாணை கூறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X