For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லண்டனில் கொல்லப்பட்ட இளைஞரின் உடலைக் கொண்டு வர தமிழ் அமைப்பு உதவி

Google Oneindia Tamil News

லண்டன்: லண்டனில் கொல்லப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் சரவணக்குமாரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவற்குத் தேவையான நிதியைத் திரட்டும் முயற்சியில் உலகத் தமிழ் கழகம் ஈடுபட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார். 24 வயதான சரவணக்குமார், லண்டனில் எம்.பி. ஏ படித்து வந்தார். படிப்புச் செலவுக்கு வசதியாக அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் அக்டோபர் 17ம் தேதி பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கிராய்டான் என்ற இடத்தில் வைத்து இருவர் அவரை பயங்கரமாக தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார் சரவணக்குமார். அவரிடமிருந்து பணம் உள்ளிட்டவற்றை அந்த நபர்கள் திருடிக் கொணடு தப்பி விட்டனர்.

படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார் சரவணக்குமார். ஆனால் அவரது நிலைமை கவலைக்கிடமாகவே வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் மூளையில் ரத்தக்கசிவு காரணமாக ஏற்கனவே சரவணக்குமார் இறந்து விட்டதாக அங்கு தெரிவித்தனர்.

அக்டோபர் 19ம் தேதி சரவணக்குமார் உயிரிழந்தார். ஆனால் இத்தனை நாட்களாகியும் அவரது உடலைக் கொண்டு வர ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், உலகத் தமிழ் கழகம் என்ற அமைப்பு சரவணக்குமாரின் உடலை தமிழகம் கொண்டு செல்லத் தேவையான நிதியைத் திரட்டும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாம். விரைவில் நிதி திரட்டப்பட்டு சரவணக்குமாரின் உடல் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி கூறுகையில், தமிழக அரசு இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சரவணக்குமாரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளது.

சரவணக்குமாரின் உடலை எவ்வளவு விரைவில் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

சரவணக்குமாரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொணடு அரசு சார்பி் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X