For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லஞ்சமா?-எஸ்.எம்.எஸ். மூலம் சிபிஐக்கு தகவல் தரலாம்

Google Oneindia Tamil News

சென்னை: லஞ்சம் வாங்குவோர் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தரலாம் என பொதுமக்களுக்கு சிபிஐ அறிவித்துள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளின் லஞ்ச வேட்டையில் இந்த ஆண்டு 65 அரசு அதிகாரிகள் சிக்கி உள்ளனர். இவர்களில் 14 பேர் எஸ்.எம்.எஸ். மூலம் வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தி சிக்கியவர்கள்.

லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றி எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் சொல்லலாம் என்று அறிவித்த பின்பு மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

முன்பெல்லாம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில்தான் புகார்கள் அதிகம் வரும். ஆனால் தற்போது உசிலம்பட்டி உள்ளிட்ட பின் தங்கிய பகுதிகளிலிருந்தும் கூட புகார்கள் வருகின்றனவாம்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 600 நிறுவனங்களில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம். இதில் 25 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், 5 இன்சூரன்ஸ் நிறு வனங்களும் பொது துறை நிறுவனங்களும் அடங்கும்.

இந்த துறை சம்பந்தப்பட்ட ஒரு சில அலுவலர்களே சி.பி.ஐ.க்கு தகவல் தரும் நபர்களாக உள்ளனர். ரகசிய கண்காணிப்பில் உள்ள அதிகாரிகளை தொடர்ந்து உற்று நோக்கி வருகிறோம். இதன் காரணமாக லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

எஸ். எம்.எஸ். தகவல்கள் லஞ்ச அதிகாரிகளை பிடிப்பதற்கு பெரும் துணையாக உள்ளது என்று சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் பற்றிய விவரத்தை 28255899 என்ற தொலைபேசி எண்ணிலோ 94440 49224 என்ற செல்போன் எண்ணில் எஸ்.எம்.எஸ். மூலமாகவோ பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X