For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி தொலை​பேசி கட்​ட​ணத்தை தபால்​கா​ரரிடமே செலுத்தலாம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இனி வீட்​டில் இருந்​த​ப​டியே தொலை​பேசி கட்​ட​ணத்தை தபால்காரர் மூலம் செலுத்தலாம். இந்த புதிய முறை முதல் கட்டமாக சென்​னை​யில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பி.எஸ்.என்.எல். லேண்ட் லைன் தொலை​பேசி சந்​தா​தா​ரர்​கள் தங்​கள் பகு​திக்கு வரும் தபால்​கா​ரர்​க​ளி​டமே தொலை​பே​சி கட்​ட​ணத்தை காசோ​லை​யாக செலுத்​த​லாம்.

இ​தற்கு சேவைக் கட்​ட​ண​மாக பில் தொகை​யு​டன் ரூ.10 மட்டும் வசூலிக்கப்படும்.

பில் கட்டணத்துடன் இந்த 10 ரூபாயையும் சேர்த்து காசோலையாக (செக்) அளிக்க வேண்​டும்.

காசோலையை அந்​தப் பகு​திக்கு உள்​பட்ட அஞ்​சல் நிலையத்தின் போஸ்ட் மாஸ்​டர் பெயரில் தரலாம். (போஸ்ட் மாஸ்டர் என்று எழுதினால் போதும், அவரது பெயருக்கு செக் எழுத வேண்டியதில்லை)

கா​சோ​லை​யு​டன் தொலை​பேசி பில்​லை​யும் சேர்த்து தபால்​கா​ரர்​க​ளி​டம் வழங்க வேண்​டும். அதைப் பெற்​றுக் கொண்டு அவர் தாற்காலிக ரசீது ஒன்றை அளிப்​பார்.

பின்னர் தொ​லை​பேசி பில்​லும்,​ தொகை​யும் சரி​பார்க்​கப்​பட்ட பின்​னர் தலைமை அஞ்​ச​ல​கம் கட்​ட​ணத்​துக்​கான முறை​யான ரசீதை தபால்காரர் மூலமே அளிக்​கும்.

அதை தபால்​கா​ரர் வாடிக்​கை​யா​ளர்​க​ளி​டம் வழங்​கி​விட்டு,​ தான் ஏற்​கெ​னவே வழங்​கிய தாற்​கா​லிக ரசீ​தை திரும்​பப் பெற்​றுக் கொள்​வார்.

இந்த புதிய நடை​முறை சென்னை நகர அஞ்​சல் வட்​டா​ரங்​க​ளில் உள்ள தலைமை மற்​றும் துணை நிலை அஞ்​சல் அலு​வ​ல​கங்​க​ளில் அறி​மு​கப்​ப​டுத்​தப்​பட்​டுள்​ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X