For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முத்துக்குமார் சிலை திறப்புக்கு போலீஸ் தடை

Google Oneindia Tamil News

Muthukumar
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்துக்குமாரின் சிலையைத் திறக்க போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. இதனால் சிலை அமைப்பாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஈழத் தமிழ் போராட்டம் தீவிரமாக இருந்தபோது சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் தீக்குளித்து உயிர் நீத்தார் முத்துக்குமார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பலர் தமிழகத்தில் உயிர் நீத்த சம்பவங்கள் நடைபெற்றன.

தற்போது முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு என்பவர், முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். ளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது.

இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.

ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X