For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலவை தொகுதி வரையறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக மேலவைக்கான தொகுதி வரையறை மாற்றம் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்று கோரி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷிக்கு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் சட்ட மேலவை அமைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கேட்ட பிறகு தேர்தல் கமிஷன் தொகுதி வரையறை திட்டத்தை முன்வைத்துள்ளது.

கடந்த 28ம் தேதி இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூட்டிய கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்றன.

எங்களுக்கு அளிக்கப்பட்ட விவரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளை உருவாக்க மக்கள் தொகையை ஒரு காரணியாக எடுத்துக்கொண்டதற்கான சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதை முதலில் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசியல் சாசனத்தின் 171வது பிரில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட பிரிவினரால் மேலவைக்கான ஒவ்வொரு குறிப்பிட்ட தொகுதியும் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதன் மூலம் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் குறிப்பிட்ட பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட அரசியல் சாசனம் வழி வகை செய்துள்ளது.

ஜனநாயகமயமாக்கலுக்கு இந்த வழிமுறையை பின்பற்றுவது அவசியம். இல்லையென்றால் விதிமுறைகளை மீறியதாகிவிடும்.

எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்களுக்கான தொகுதியை நிர்ணயிக்க பொது மக்கள் தொகையை ஒரு அளவாக எடுத்துக் கொள்வதை தவறு என கருதுகிறேன்.

மாவட்ட வாரியான உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர் களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்வதே சரியாக இருக்கும். மேலவைக்கான தொகுதிகள் உருவாக்கப்படுவது முற்றிலும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

இந்த திட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அனைத்து தொகுதிகளும் நடைமுறை சார்ந்ததாக மற்றும் சமமானதாக இருப்பது மிகவும் அவசியம். பூகோளரீதியாக சமமானதாக இருக்க வேண்டும்.

எனவே பூகோள விவரங்கள் மற்றும் நிர்வாக எல்லைகள் அடங்கிய விரிவான வரைபடத்தை வெளியிடுவது அவசியம். தொகுதி வரையறை நகலானது மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் வழங்கப்பட்டு கருத்துக்கள் கேட்டறியப்பட வேண்டும். பொது மக்கள் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க குறைந்தபட்சம் 2 மாத காலம் அவகாம் அளிக்கப்பட வேண்டும்.

பொது மக்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், அறிவாளிகள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அடங்கிய குழுவையும் தேர்தல் கமிஷன் நியமிக்கலாம்.
அரசியல் சார்பில்லாத ஒருவரை இதற்கு தலைவராகவும் நியமிக்கலாம். தொகுதி மறுவரையறை அவசரத்தில் மேற்கொள்ளப்படக் கூடாது.

இது சமுகத்தின் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பட்டதாரிகள், ஆசிரியர்கள் ஆகியோரின் கணக்கு அடிப்படையில் மறுவறை இருக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை அறிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார். இதன் நகலை தேர்தல் கமிஷனர் சம்பத் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஆகியோருக்கும் அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X