For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராடியா டேப்-எந்த தனி நபரையும் அவமதிக்கும் வகையில் வெளியிடக் கூடாது-சுப்ரீம் கோர்ட்

By Chakra
Google Oneindia Tamil News

Nira Radia
டெல்லி: நீரா ராடியாவும், மற்றவர்களும் பேசிய தொலைபேசிப் பேச்சுக்களை வெளியிடும்போது சம்பந்தப்பட்டவர்களை அவமதிக்கும் வகையில், புகழை சீர்குலைக்கும் வகையில் அதை வெளியிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆடியோ வெளியீட்டால் தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளதாக கூறி ரத்தன் டாடா தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை முடிவடையும் வரை இதை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாடா தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீரா ராடியாவுக்கு எதிராக நிதித்துறைக்கு வந்த புகாரின் நகலை சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு அட்டர்னி ஜெனரல் வாஹன்வதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜூனரி 1ம் தேதிக்குள் இன்னொரு அபிடவிட்டை தாக்கல் செய்யுமாறு டாடாவுக்கும் உத்தரவிட்டது பெஞ்ச். மேலும் வழக்கு விசாரணை பிப்ரவரி 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இந்த வழக்கில் கடந்த 10ம் தேதி மத்திய அரசு ஒரு பதில் தாக்கல் செய்தது. அதில், 2007ம் ஆண்டு ராடியாவுக்கு எதிராக ஒரு புகார் நிதித்துறைக்கு வந்தது. அதில், ராடியாவுக்கு வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்தே அந்தப் புகாரை தாக்கல் செய்யுமாறு தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் கடந்த 9 ஆண்டுகளில் ராடியாவின் சொத்து மதிப்பு ரூ. 300 கோடியாக உயர்ந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என அந்த புகாரில் கூறப்ட்டிருந்ததாக மத்திய அரசு கூறியுள்ளது.

English summary
The Supreme Court on Monday while hearing Ratan Tata"s petition on corporate lobbyist Nira Radia tapes directed that the image of individuals should not be tarnished till the hearing in the privacy suit is completed. The apex court directed Attorney General of India GE Vahanvati to submit a copy of the complaint received by Finance Ministry against Nira Radia in a sealed envelope. The court also gave Ratan Tata time till January 1 to file another affidavit in the case and fixed the next hearing on February 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X