For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம்: அடுத்து தெருவில் இறங்கிப் போராடுவோம்-பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகராத்தில் ஜேபிசி விசாரணை மட்டுமே எங்களுக்குத் தேவை. இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் அரசு ஏற்க மறுத்தால், நாங்கள் அடுத்து தெருவில் இறங்கிப் போராடுவோம் என பாஜக அறிவித்துள்ளது.

ஜேபிசி விசாரணைக்கு உத்தரவிடும் பேச்சுக்கே இடமில்லை. ஊழல் குறித்து பேச பாஜகவுக்கு அருகதை இல்லை. அதுகுறித்து எங்களுக்குப் பாடம் நடத்த அவர்கள் யார் என்று நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காட்டமாக கூறியுள்ளார்.

இதனால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அரசு ஏற்கும் யோசனையிலேயே இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அடுத்து தெருவில் இறங்கிப் போராடப் போவதாக பாஜக கூறியுள்ளது.

இதுகுறித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஊழல்வாதிகளுக்கு எதிராக அடுத்து நாங்கள் தெருவில் இறங்கிப் போராடப் போகிறோம். விரைவில் இப்போராட்டத்தை நாங்கள் அறிவிப்போம் என்றார் அவர்.

இதன் மூலம் அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான மோதல் போக்கு மேலும் முற்றும் என்று தெரிகிறது. ஒரு வேளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடடம் நடத்துமானால் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு இடைத் தேர்தலை அறிவிக்கும் அதிரடி முடிவுக்கு காங்கிரஸ் போகலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

English summary
The government-opposition standoff in Parliament is expected to worsen in coming days with Congress President Sonia Gandhi rejecting the JPC demand on the 2G spectrum issue and the NDA threatening to take to streets. An indication to this effect was available with the Leader of the Opposition Sushma Swaraj declaring that the NDA will be taking this fight against corruption to the people. "We will be hitting the roads soon," Swaraj told reporters after a dharna of NDA in Parliament on the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X