For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு பிரதமர் ஆஜராக பிரணாப் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Pranab Mukherjee‎
கொல்கத்தா: நாடாளுமன்றம் நியமித்த பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆஜராகக் கூடாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவர் பிரதமர். ஆனால் நாடாளுமன்றம் அமைத்த ஒரு கமிட்டிக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

என்னைக் கேட்டால், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக பொதுக் கணக்குக் குழு முன்பு பிரதமர் ஆஜராகக் கூடாது என்றுதான் யோசனை தெரிவிப்பேன். இது அவசியமற்றது என்றார் பிரணாப்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தான் பொதுக் கணக்குக் குழு முன்பு ஆஜராகத் தயார் என்று அதிரடியாக அறிவித்தார் பிரதமர். மேலும், சமீபத்தில் இதுதொடர்பாக அவர் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கும் கடிதம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Senior Congress leader Pranab Mukherjee at a press conference in Kolkata has exprresed his difference of opinion on the PM Manmohan Singh's offer to appear before Parliamentary Accounts Committee (PAC) in the 2G scam. Pranab said he would have definitely advised him against it if his opinion was sought.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X