For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபாவில் கேள்விநேரம் பிற்பகல் 2 மணிக்கு மாற்றம் : ஹமீத் அன்சாரி

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி:
ராஜ்யசபாவில் கேள்வி நேரம் காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹமீத் அன்சாரி கூறியதாவது,

வரும் 7-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை கேள்வி நேரம் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். மேலும் 11-ம் தேதியன்று 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை நடைபெறும்.

வரும் திங்கட்கிழமை (7-ம் தேதி) அவை கூடியவுடன் முதலில் ஜீரோ நேரம் நடைபெறும். அப்போது அவைத் தலைவரின் அனுமதி பெற்ற பிறகு உறுப்பினர்கள் விவகாரங்களை எழுப்பலாம் என்றார்.

நாடாளுமன்றத்தில் ஏற்படும் தொடர் அமளிகளால் பெரிதும் பாதிக்கப்படுவது கேள்வி நேரம்தான்.எனவேதான் இந்த மாற்றம். இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ராஜ்யசபாவின் கேள்வி நேரம் மாற்றியமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajya Sabha speaker Hameed Ansari told that question hour has been changed from 11 am to 2 pm from march 7-10. Question hour will be held from 2.30 to 3.30 pm on march 11 alone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X