For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங். பிடிவாதம் தளர்ந்தால் திமுக மறு பரிசீலனைக்குத் தயார்-டி.ஆர்.பாலு

Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சி தனது பிடிவாதத்தைத் தளர்த்திக் கொண்டு புதிய திட்டத்தை முன்வைத்தால், திமுக தனது முடிவை மறு பரிசீலனை செய்யும் என்று மூத்த திமுக தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் டி.ஆர்.பாலுவை செய்தியாளர்ள் சந்தித்தனர். அப்போது திமுகவின் முடிவு குறித்து பாலுவிடம் கேட்டபோது, காங்கிரஸ் கட்சி புதிய திட்டத்தை முன்வைத்து விவாதிக்க முன்வந்தால் நிச்சயம் நாங்கள் அதை வரவேற்போம். எங்களது முடிவையும் மறு பரிசீலனை செய்வோம். 60 இடங்களுக்கு காங்கிரஸ் ஒத்துக் கொள்ளுமேயானால், நிச்சயம் எங்களது முடிவில் மாற்றம் வரும்.

தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோருவது நியாயமற்றது, முறையற்றது.

திமுகவின் முடிவு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமைந்தது. இதற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும் எநதத் தொடர்பும் இல்லை.

செயல் திட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது படேலுக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

இந்த முடிவால், திமுக, காங்கிரஸ் இடையிலான தோழமையில் எந்தப் பாதிப்பும் வராது. நாங்கள் தொடர்ந்து நண்பர்களாகவே உள்ளோம். இந்த முடிவால் இரு கட்சிகளுக்கும் இடையிலான தோழமை முடிந்து விட்டதாக நான் கூற மாட்டேன். எங்களது அமைச்சர்களை மட்டுமே நாங்கள் வாபஸ் பெறுகிறோம் என்றார் பாலு.

அமைச்சர்கள் எப்போது விலகுவார்கள் என்ற கேள்விக்கு பாலு பதிலளிக்கையில், பேக்ஸ் அனுப்பி யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்ச ந்தித்து அவருடன் பேசிய பிறகுதான் தங்களது ராஜினாமாக் கடிதங்களை திமுக அமைச்சர்கள் அளிப்பார்கள் என்றார்.

English summary
Senior DMK leader T R Baalu on Saturday night indicated his party could review its decision to pull its ministers out of the Union Cabinet if the Congress relents on its stand over sharing of seats in the upcoming Assembly polls in Tamil Nadu. "Definitely we will have a discussion if they (Congress) reconsider. If Congress agrees for 60 seats we will reconsider out decision(to pull out of Cabinet)," Baalu told reporters. "We are all friends. We do not see the end of the road. Though we have withdrawn ministers our friendship will continue forever." he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X