For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 8000 பதற்றமான வாக்குச் சாவடிகள்: குரேஷி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 8 ஆயிரம் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கவும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரநதிதிகளைச் சந்தித்துப் பேசவும் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி, இதர ஆணையர்கள் வி.எஸ்.சம்பத், பிரம்மா ஆகியோருடன் நேற்று சென்னை வநதார்.

இது குறி்த்து அவர்கள் மூவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து வாக்குச் சாவடிகளிலுமே கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் கட்சியினர் வலியுறுத்தினர்.

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் நடுநிலையாக இல்லை என்ற புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 24 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் புகார் பிரிவு குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பிரிவைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றோம். சில் செல்போன் நிறுவனங்களின் தொலைபேசி எண்களில் இருந்து அந்தப் பிரிவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும்.

வாக்குச் சாவடி சீட்டுகளை வாக்குப் பதிவுக்கு ஏழு நாட்களுக்கு முன்பாக வழங்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். வாக்குச் சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் கருத்துத் தெரிவித்தன. அது நல்ல யோசனை.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல், சட்டம்-ஒழுங்கு, தேர்தல் செலவு, தேர்தல் நடத்தை நெறிமுறைகள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடுநிலை தவறாது இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பண புழக்கத்தைத் தடுப்பது சவாலான விஷயம். இதற்குரிய வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கெனவே அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதல் பார்வையாளர்கள், விடியோ கண்காணிப்பு, நிழல் பதிவேடு ஆகியன பண புழக்கத்தைத் தடுக்கும் வழிகளாகும்.

தேர்தல் நெருங்க நெருங்க நெறிமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவோம்.

வாக்குச் சாவடி சீட்டுகளை அரசியல் கட்சிகளும் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சீட்டு அளிக்கும் நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்படும். பிரசார நேரத்தை அதிகரிக்கும் வாய்ப்பு இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. பிரசார நேரத்தை அதிகரிக்க முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவல்ல.

வாக்குச் சாவடிகள் இரண்டு வகைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன. பண புழக்கம் அதிகமுள்ள சாவடிகள், சட்டம்-ஒழுங்கால் பதற்றமான சாவடிகள் என இரண்டு வகைகளாக அறியப்பட்டுள்ளன. அதில் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்றார் குரேஷி.

அதிகரிக்கப்பட்டுள்ள எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களிலும் பயன்படுத்தக் கூடாது. தமிழகத்தில் பண பலமே பெரும் பிரச்சனையாக உள்ளது. கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்று உறுதியளித்துள்ளனர் என்றார்.

தேர்தல் நடத்தை விதியை மீறியது தொடர்பாக, மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். தேர்தல் விதியை மீறாமல் நடந்து கொள்வதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார் என்றார்.

English summary
CEC Qureshi came to Chennai yesterday to discuss about the Tamil Nadu assembly election work. At that time he told that money is the biggest problem in Tamil Nadu. We have identified 8,000 voting booths as sensitive. We have requested the political parties not to give money to the voters for which they also agree, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X