For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள்-விக்கிலீக்ஸ்

Google Oneindia Tamil News

Wikileaks Logo and Prabhakaran
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களை மேற்கோள் காட்டி ஈழத் தமிழ் இணையங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

பிரபாகரன் மறைந்திருந்த பகுதியில் ராணுவம் கடும் குண்டுவீச்சை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி பீட்டர் பர்லர், வாஷிங்டனுக்கு குறிப்பு அனுப்பினார்.

இருப்பினும் இதை சீனா மட்டும் விரும்பவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் மீது விஷமப் பார்வை பார்த்த மேனன்

இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரை பாராட்டும் வகையில் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கருத்து தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் மேனன் பேசுகையில், புலிகள் மீது இலங்கை ராணுவம் தான் எதிர்பார்த்ததை விட கடும் போர் மேற்கொள்வதாக கூறியுள்ளார் மேனன்.

English summary
Western countries tried to save LTTE Chief Prabhakaran from Lankan Army, says Wikileaks. It further told that, Western countries seriously tried to save Prabhakaran from Lankan army's clutches. But China opposed this. It didnt want LTTE and its leaders to be saved, it said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X