For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையின் கொலைக்களம் - சேனல் 4 வெளியிட்டுள்ள விளம்பரம்

By Shankar
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கான வீடியோ ஆதாரங்களை முழுமையாக வெளியிட முடிவெடுத்துள்ள பிரிட்டனின் சேனல் 4, அதற்கான விளம்பரங்களை பெரும் செலவில் வெளியிட்டு வருகிறது.

"இலங்கையின் கொலைக்களம்" என்னும் தலைப்பில் இந்த விளம்பரங்கள் உலகின் முன்னணி நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.

இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை இதில் ஒளிபரப்பவுள்ளது சேனல் 4.

த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் பெரும் செலவில் இந்த விளம்பரங்களை சேனல் 4 வெளியிட்டு வருகிறது.

உலகின் மிகக் கொடூரமான போர்க்குற்ற வீடியோ

மேலும், ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பவிருக்கும் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

அதேநேரம், உலக வரலாற்றில் மிகக் கொடூரமான இந்த வீடியோ பதிவுகளை கர்ப்பிணிகள், பலவீனமான இதயமுள்ளோர் பார்க்க வேண்டாம் என சேனல் 4 தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதிப் போரில் நடந்த அத்தனை போர்க்குற்றங்களுக்கும் முழுப் பொறுப்பு இலங்கை ராணுவமே என்பதற்கு 100 சதவீத ஆதாரங்களை இந்த வீடியோ பதிவுகள் வெளிக்கொணரவிருப்பதால், இலங்கை பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த வீடியோ வெளியாவது, இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்த உள்ளது. பிரிட்டிஷ் அரசு பொருளாதாரத் தடைகளை இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

English summary
A British film documenting the final bloody weeks of Sri Lanka's civil war, which it claims provides evidence of war crimes committed by government forces, will be broadcast on television on Tuesday. The Channel 4 film uses mobile phone, official army and Tamil footage, satellite imagery and stills shot in the final stages of the Sri Lankan army's battle against the Liberation Tigers of Tamil Eelam (LTTE) separatists in 2009.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X