6 நாள் தொடர் சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

Subscribe to Oneindia Tamil

Mumbai Stock Exchange
மும்பை: அமெரிக்க - ஐரோப்பிய பொருளாதார நெருக்கடிகளால் கடந்த ஆறு தினங்களாக தொடர் சரிவுக்குள்ளான இந்தியப் பங்குச் சந்தைகள் இன்றுதான் சாதகமான நிலைக்குத் திரும்பின.

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை எடுத்த எடுப்பில் 400 புள்ளிகள் உயர்வு கண்டது. நிப்டியில் 107 புள்ளிகள் உயர்ந்தது.

ஆனால் பிற்பகலில் இந்த நிலையில் கொஞ்சம் மாறுதல் இருந்தது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 320.69 புள்ளிகள் உயர்ந்து 17,178.60 ஆக இருந்தது. நிப்டி 102 புள்ளிகளை கூடுதலாகப் பெற்று 5,174.95 ஆக இருந்தது.

டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, மகிந்திரா அண்ட் மகிந்திரா, இன்போஸிஸ், டிஎல்எப் மற்றும் டிசிஎஸ் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின.

ஆசியாவின் இதர பங்குச் சந்தைகள் ஹாங்காங், கொரியா, ஷாங்காய், தைவான் போன்றவற்றிலும் இன்று சாதக நிலை திரும்பியிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+