For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகளிருக்கு இலவச நாப்கின் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கு இலவச நாப்கின் வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

18 பைகள் இலவச நாப்கின்

மாநிலம் முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு மூலம் பெண்கள், மாணவிகள் என அனைவருக்கும் மாதம்தோறும் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுகாதார துறை அலுவலகர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வழங்கப்படும்.

2 மாதத்திற்கொரு முறை 6 எண்ணம் கொண்ட 3 பைகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 18 பைகள் வழங்கப்படும். இந்த பேக்கேஜ் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கும் வழங்கப்படும். இரும்புச்சத்து மாத்திரை, குடல் புழு நீக்கல் மாத்திரை மற்றும் வளர் இளம்பெண் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்படும்.

சுற்றுப்புற சுகாதாரம்

மேலும் இந்த கழிவு பொருட்கள் மூலம் உருவாகும் சுற்றுப்புற சூழல் தூய்மையை காக்கும் விழிப்புணர்வும், இதனை கருத்தில் கொண்டு குழி தோண்டி புதைக்கவும், எரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெறுவர்.

நாட்டிலேயே முதன்முதலாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்குரூ. 44 கோடியே 21 லட்சம் செலவாகும். சுகாதாரம் மற்றும் தொற்று‌நோய் பரவும் விதம் குறைக்கப்படும். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In a move aimed at ensuring menstrual hygiene of rural girls and women, the Tamil Nadu government today announced implementation of a free sanitary napkins scheme, claimed to the 'first-of-its-kind' initiative in the country, at a cost of Rs 44.21 crore. The scheme would also cover women prisoners, a state government release here said adding the initiative was part of Chief Minister Jayalalithaa's efforts to ensure women's welfare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X