For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.பி.களுக்கு ஐபேட்கள்: ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 ஒதுக்கீடு

By Siva
Google Oneindia Tamil News

Ipad
டெல்லி: மக்களவை உறுப்பினர்களை இனி ஐபேட் கையுமாகப் பார்க்கலாம். ஐபேட் வாங்கிக் கொள்வதற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.50,000 நிதி ஒதுக்கியுள்ளது மக்களவை செயலகம்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்கியதில் இருந்தே தினமும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. கருப்புப் பணம், 2ஜி ஊழல், தெலுங்கானா விவகாரம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ஆகியவற்றை எதிர்த்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பிள் ஐபேட் கொடுக்கப்படுகிறது. இதற்காக மக்களவை செயலகம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ரூ.50,000 ஒதுக்கியுள்ளது.

நாங்கள் எம்.பி.க்களை ஐபேட் பயன்படுத்துமாறு ஊக்குவிக்கிறோம். அதன் மூலம் ஏராளமான பேப்பரை மிச்சப்படுத்த முடியும் என்று லோக் சபா செகரடரி ஜெனரல் டி.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

எம்.பி.க்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஆப்பிள் ஐபேட் அல்லது சாம்சங் கேலக்ஸி டேப்ஸ் வாங்கிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் நாடாளுமன்ற விவகாரங்கள், கேள்வி, பதிலகள் என பல்வேறு விஷயங்களை பிரிண்ட் செய்து எம்.பி.க்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது எம்.பி.க்கள் ஐபேட் வாங்கிவிட்டால் பிரிண்ட் செய்து அனுப்பும் விஷயங்களை டிஜிட்டல் முறையில் அனுப்பிவிடலாம். அதை அவர்கள் ஐபேடிலேயே பார்த்து தேவையான திருத்தங்களை செய்யலாம்.

எம்.பி.க்கள் ஐபேட் வாங்கவிருப்பதால் லோக்சபாவில் வை-பை வசதி செய்யப்படவிருக்கிறது.

English summary
Lok Sabha secretariat has sanctioned Rs.50,000 to each of the members to buy an iPad. They want the MPs to save paper and to be tech-savvy. MPs are thrilled to use iPads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X