For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு சரியாகவே நடக்கிறது- வைகோ பாராட்டு

Google Oneindia Tamil News

Vaiko
மதுரை: கேரள அரசு தமிழன் தலையில் கல்லை போட நினைத்தால், 15 நாட்கள் கூட ஆகாது. ஒட்டுமொத்த கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்துவிட்டால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவைக் கண்டித்து மதுரையிலிருந்து தேனிக்கு வைகோ இன்று விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று பொய்யான தகவலை கூறிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி செய்கிறது கேரள அரசு. பேபி அணையை வலுப்படுத்தப்போகிறோம் என்று சொல்லிவிட்டு ஒட்டுமொத்த அணையையும் உடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு 1200 கிலோ வெடிபொருளை தயாராக வைத்துள்ளது கேரள அரசு.

இந்த சதியை முறியடிக்க மத்திய ரிசர்வ் போலீசை பாதுகாப்புக்கு போட வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நிலைப்பாடுகளும் சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு கொந்தளிப்பை உருவாக்க வேண்டும் என்று கேரள அரசு ஒரு நாடகத்தை நடத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. 7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும்கூட அணை தாங்கும் என வல்லுநர்கள் நிரூபித்துள்ளனர். ஆனால் இந்த பகுதியில் 3 ரிக்டர் அளவுகூட நிலநடுக்கம் ஏற்படாது.

கேரளத்தில் உள்ள அரசியல் கட்சியினர் அணை உடைந்துவிடும் என அந்த மாநில மக்கள் மத்தியில் பொய்யான பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த மக்களுக்கு அணைகளுடைய நிலையை விளக்க இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் இல்லாவிட்டால் மதுரை உள்ளிட்ட 6 தென்மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேலும் 85 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னையில் தமிழக அரசு சரியான பாதையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழ்நாட்டில் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் மூன்று இடங்களில் மட்டுமே அந்த தடை உத்தரவு உள்ளது.

கேரள மக்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இதற்கு ஆதரவு கரம் நீட்டாதீர்கள். கேரள அரசு தமிழன் தலையில் கல்லை போட நினைத்தால், 15 நாட்கள் கூட ஆகாது. ஒட்டுமொத்த கேரளாவுக்கு செல்லும் உணவு பொருட்களை தடுத்துவிட்டால் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்.

முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க கேரள காவல்துறையினரால் முடியாது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையை இங்கு நிறுத்த வேண்டும். இதை பிரதமரிடமும் நான் வலியுறுத்தி உள்ளேன்.

நான் முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த வைகோவாக இருந்தால் ஆவேசமாக பேசிவிட்டு போயிருப்பேன். அடிக்கு அடி, உதைக்கு உதை. குண்டுக்கு குண்டு. ஆனால் தற்போது அப்படி பேசபோவதில்லை. நான் நல்லது செய்தால் யாரையும் பாராட்டுவேன். ஆனால் தப்பு செய்தால் யாரையும் எதிர்க்க தயங்க மாட்டேன்.

வரும் 21ஆம் தேதி பொருளாதார முற்றுகை போராட்டம் நிச்சயமாக நடைபெறும். கேரளா செல்லும் அத்தனை வாகனங்களும் மறிக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த 40 கோடி ரூபாயும், புதிய அணையை கட்ட 600 கோடி ரூபாயும் கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கேரளாவில் என்னுடைய கொடும்பாவியை 32 இடங்களில் எரிக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி நான் கவலைப்படபோவதில்லை என்றார் வைகோ.

English summary
MDMK chief Vaiko has warned Kerala govt on Mullaiperiyar dam issue. He started an awareness campaign to Theni from Madurai today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X