For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வடமாநிலங்களில் கடும் குளிர்– 26 பேர் உயிரிழப்பு, ரயில்கள் தாமதம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வட இந்தியாவில் நிலவும் கடும் குளிருக்கு இது வரை 26 பேர் பலியாகி உள்ளனர்.

கடுமையான பனி மூட்டத்தால் வட இந்தியாவில் வரும் ரயில்கள் தாமதமாக வந்து சேருகின்றன. சில தினங்களாக மீரட்டில் அதிக பட்ச குளிர் மைனஸ் 2.2 செல்சியஸ் ஆக பதிவாகி உள்ளது

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியான, உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவி வரும் பனியினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குளிர் தாங்க முடியாததால் பொதுமக்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்வதையும் காண முடிந்தது.

தலைநகர் டெல்லியில் கடும் குளிர் நிலவுவதால், சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து சேர்வதால், கடும் குளிரில் பயணிகள் ரயில் நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும், விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 14 விமானங்கள் தாமதமாக வந்தன.

டெல்லி மட்டுமல்லாது வட இந்தியாவின் பல பகுதிகளிலும், இரவு முதல், கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வட இந்திய ரயில்வே 30 ரயில்களை ரத்து செய்துள்ளது. 4 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது. 80 க்கும் மேற்பட்ட ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன

26 பேர் உயிரிழப்பு...

வட மாநிலங்களில் நிலவும் கடுங் குளிருக்கு இதுவரை, 26 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் குளிருக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்

English summary
At least 26 people have died across north India with the cold wave intensifying and fog tightening its grip over Delhi and other cities. Most of these deaths have been reported from Uttar Pradesh, where six people lost their lives last night. Meerut was the coldest place, recording a low of 2.2 degrees Celsius.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X