For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாதவன் நாயர் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்

By Mathi
Google Oneindia Tamil News

Madavan Nair and Radhakrishnan
பெங்களூர்: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் தொடர்பான சர்ச்சைகளுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை. அரசு நியமித்த குழுக்களின் பரிந்துரைகளையே நாங்கள் வெளியிட்டுள்ளோம் என்று இஸ்ரோவின் தலைவர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தமானது சர்ச்சையை ஏற்படுத்தி கடைசியாக மாதவன் நாயர் உட்பட 4 விஞ்ஞானிகள் அரசு பதவி வகிக்க தடை எனும் சரவெடியாய் வெடித்தது. மாதவன் நாயரோ எல்லாமே ஒருதலைபட்சமானது என்று குமுறிப் பார்த்தார்.

மத்திய அமைச்சர் நாராயணசாமியோ, எல்லாம் முறைப்படித்தான் நடந்தது. நாயரிடமும் விசாரணையெல்லாம் நடத்தினோம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். இருப்பினும் மாதவன் நாயர் தரப்பு அமைதி காக்கவில்லை.

இந்நிலையில் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த சர்ச்சைகள் பற்றி விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான ஆண்ட்ரிக்ஸும் தேவாஸும் மேற்கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் கருத்தைத் தான் இணையத்தில் வெளியிட்டுள்ளோம்.

இஸ்ரோவின் இணையத்தில் முழு அற்க்கையும் இடம்பெற்றுள்ளது. சின்ஹா குழு அறிக்கைக்குப் பிறகு இரண்டாவது அறிக்கையில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்வது பற்றியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேல் நாங்கள் எதுவும் சொல்வதற்கில்லை. இதில் மாதவன் நாயர் உட்பட 4 விஞ்ஞானிகளுக்கு எதிராக தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை என்றார் அவர்.

English summary
A day after a high-level panel report found "serious" administrative and procedural lapses on the part of former ISRO chief G Madhavan Nair and three other scientists in the Antrix-Devas deal, space agency chief K Radhakrishnan today said there was nothing personal in it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X