For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதாரச் சரிவுக்கு பி-ஸ்கூல்களை குறைசொல்லக் கூடாது: சௌமித்ரா தத்தா

By Siva
Google Oneindia Tamil News

Soumitra Dutta
அமெரிக்காவில் உள்ள கார்னெல் ஜான்ஸன் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டின் டீனாக நியமிக்கப்பட்டிருக்கும் சௌமித்ரா தத்தா ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டி வருமாறு,

கேள்வி: இந்தியாவில் வளர்ந்தது உங்கள் வளர்ச்சிக்கு எந்த வகையில் உதவுகிறது?

எனது தந்தை இந்திய விமானப் படையில் மருத்துவராக இருந்தார். தாய் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். விமானப் படை சமூகத்தில் இருந்ததால் நான் டெல்லி, ஜோர்ஹத் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்துள்ளேன். அதனால் எனக்கு நாட்டின் பல்வேறு இடங்களில் நண்பர்கள் உள்ளனர். இப்படி இடம் விட்டு இடம் சென்றதால் தற்போது வேலைக்காக பல்வேறு நாடுகளுக்குச் செல்வது புதிதாகத் தெரியவில்லை. மனித உறவுகளின் மதிப்பை எனது தாய் கற்றுக் கொடுத்தார்.

சில தலைமுறைகளாக நீங்கள் வெளிநாடுகளிலே இருக்கிறீர்கள். இந்தியாவுடனான உங்கள் உறவு எப்படி உள்ளது?

நான் 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை இந்தியா வருகிறேன். எனது பெற்றோரும், சகோதரியும் டெல்லியில் வசிக்கின்றனர். எனக்கு இந்தியாவில் நிறைய நண்பர்கள் உள்ளனர். சிஐஐ உள்ளிட இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் இன்போசிஸ் போன்ற நிறுவனங்களுடன் தொடர்பு உள்ளது. நான் ஒரு இந்தியன். எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும்.

ஐரோப்பாவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அமெரிக்காவில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ஐஎன்எஸ்இஏடி ஒரு சர்வதேச கல்வி நிறுவனம். ஐஎன்எஸ்இஏடியும் சரி, ஐரோப்பிய கல்வி நிறுவனங்களும் சரி அயல்நாடுகளில் படித்தவர்களை வரவேற்பதில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஐரோப்பிய கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு பேராசிரியர்களை கவருவதில்லை. மேலும் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் வரையறை வைத்துள்ளன. ஆனால் இந்த நிலைமை தற்போது மாறி வருகிறது.

உங்களை டீனாக நியமித்திருப்பது பற்றி கார்னெலின் தலைவர் பெருமிதம் கொண்டுள்ளார். ஐஎன்எஸ்இஏடி போன்று கார்னெலும் பல்வேறு இடங்களில் துவங்கப்படுமா?

கார்னெல் ஒரு சர்வதேச பல்கலைக்கழகம். அதற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் தொடர்பு உள்ளது. கார்னெல் பல்கலைக்கழகம் தனது ஜான்ஸன் ஸ்கூலுக்கு அமெரிக்காவுக்கு வெளியே டீனைத் தேடி நியமித்திருப்பது தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் உலகமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதின் அடையாளம். ஜான்ஸனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும், உலகம் ஜான்ஸனுக்கு வர வேண்டும். இதன் சாத்தியக்கூறுகள் பற்றி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்.

ஐஎன்எஸ்இஏடியில் பணிபுரிந்த உங்களை கார்னெல் தனது பக்கம் ஈர்த்துள்ளதன் மூலம் ஐரோப்பாவுக்குள் அது நுழைய முயல்கிறதா? ஏற்கனவே நிதிநெருக்கடி உள்ள நேரத்தில் ஐரோப்பாவுக்கு செல்ல இது தவறான நேரம் அல்லவா?

கார்னெல் நிச்சயமாக ஐரோப்பாவில் கவனம் செலுத்தும். நிதிநெருக்கடி நிரந்தரமானதன்று.

பிசினஸ் ஸ்கூல்களின் சிறந்த மாணவர்களால் கடந்த 2008ல் உலகம் நிதிநெருக்கடியில் சி்க்கித் தவித்தது. அதை தவிர்க்க எம்.பி.ஏ. படிப்புகளில் என்னென்ன பாடங்கள் வைக்கலாம்?

2008 நிதிநெருக்கடிக்கு பிசினஸ் ஸ்கூல்கள் மீது பழிசுமத்துவது தவறு. இந்த பிரச்சனைக்கு காரணமானவர்களில் சிலர் மட்டும் தான் எம்.பி.ஏ. படித்தவர்கள். எம்.பி.ஏ. படிப்பை நிதிநெருக்கடி பிரச்சனை எவ்வாறு பாதித்து என்பது நல்ல கேள்வி. தொழில் முறைகளை தொலைநோக்குப் பார்வையுடன் பார்க்க வேண்டும். முன்மாதிரிகள் மற்றும் அதன் தீர்வுகளின் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் முன்மாதிரிகளும், ஊகங்களும் தோல்வியடைந்தால் என்னவாகும் என்று கற்றுக்கொள்ளுங்கள். நெறிமுறைகளின் மதிப்பை தெரிந்து அதை பலப்படுத்த வேண்டும்.

நிர்வாக சிந்தனைகள் மற்றும் நடைமுறைகள் மீது எந்தெந்த புது திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?

முதலீடு செய்யும் உரிமையாளர்கள் தவிர பங்குதாரர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக பிசினஸ் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள், உள்நாட்டு பங்குதாரர்களை மட்டும் கருத்தில் கொண்டு செயல்படாமல் உலக மக்களையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இனிவரும் தொழில் தத்துவங்கள் இந்த எண்ணங்களைப் பிரதிபலிக்க வேண்டும்.

இன்னோவேட்டிங் அட் தி டாப் என்ற புத்தகத்தை எழுதியுள்ளீர்கள். தற்போது டாப்பில் உள்ள நீங்கள் என்னென்ன புதுமை செய்யப்போகிறீர்கள்?

டாப்பில் இருப்பதாக நான் உணரவில்லை. பிசினஸ் ஸ்கூலின் டீனாக பரிந்துரைக்கப்பட்டுள்ளேன். அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்பட பங்குதாரர்களின் கருத்துகளைக் கேட்டு அவற்றுக்கு செயல் வடிவம் கொடுப்பது தான் எனது முக்கிய வேலை. கார்னெல் மற்றும் ஜான்ஸன் ஸ்கூல் பல புதுமைகள் செய்யவிருக்கின்றன.

English summary
Soumitra Dutta, who was recently elevated to the enviable position as Dean of Cornell Johnson Graduate School of Management feels that B-schools should not be blamed for 2008 financial crisis. Only a small fraction of the people involved in creating the crisis had MBA degrees, he told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X