For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிகார துஷ்பிரயோக வழக்கு - பதவியை ராஜினாமா செய்தார் ஜெர்மனி அதிபர்

Google Oneindia Tamil News

Germany president Christian Wulff
பெர்லின்: குறைந்த வட்டிக்கு கடன் பெற்ற வழக்கில் குற்றவாளியாக என்று அறிவிக்கப்பட்ட ஜெர்மனி அதிபர் கிறிஸ்டியன் வுல்ப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜெர்மனியின் அதிபராக இருந்தவர் கிறிஸ்டியன் வுல்ப் (52). கடந்த 2008ம் ஆண்டு சஸோனி மாகாணத்தின் கவர்னராக இருந்த போது கிறிஸ்டியன் குறைந்த வட்டிக்கு 50,00,000 யூரோ வீட்டு கடனை, தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பெற்றிருந்தார்.

அதன்பிறகு கிறிஸ்டியன் ஜெர்மனி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்டியன் அதிபரான பிறகு, குறைந்த வட்டிக்கு கடன் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்த செய்தியை வெளியிட்ட 'பிட்' என்ற செய்தித்தாளின் ஆசிரியருக்கு, கிறிஸ்டியன் மிரட்டல் விடுத்தார்.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜெர்மனியின் அதிபராக இருந்த, கிறிஸ்டியன் மீது பதவி துஷ்பிரயோகம் செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் வழக்கு விசாரணைக்கு விதி விலக்கு அளித்த பாராளுமன்றம், பின்னர் விதிவிலக்கை நீக்கியது.

இதனையடுத்து கிறிஸ்டியன் மீதான வழக்கு விசாரணையில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. எனவே கிறிஸ்டியன் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அதிபர் அதிகாரம் படைத்த ஏஞ்சலா மெர்கலுக்கு அனுப்பி வைத்தார். இதனால் விரைவில் ஜெர்மனில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தெரிகின்றது.

English summary
Germany's president resigned on Friday in a scandal over favors he allegedly received before becoming head of state, and Chancellor Angela Merkel moved quickly to try and head off a domestic political crisis as she grapples with Europe's debt troubles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X