For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிலானிக்கு பிரதமராக இருக்கும் தகுதியில்லை: பாக். சுப்ரீம் கோர்ட் அதிரடி

By Siva
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு அந்த பதவியில் இருக்கும் தகுதி இல்லை என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி உள்பட பல தலைவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அந்நாட்டு அரசு விசாரணைக்கு எடுக்காமல் வழக்கை முடித்துவிட்டது. அந்த வழக்குகளை எல்லாம் மறுபடியும் விசாரணைக்கு எடுக்குமாறு உச்ச நீதி்மன்றம் அரசுக்கு உத்தரவிட்டு கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தது.

ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி பிரதமர் கிலானிக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் கொடுத்ததுடன் அவரை ஜனவரி 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கிலானி நீதிமன்றத்தை அவமதி்த்துவி்ட்டார் என்று கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து கிலானி பிரதமராக இருக்க தகுயில்லாதவர் என்று தேசிய சபை சபாநாயகர் பஹ்மிதா அறிவி்ததார். ஆனால் இதை எதிர்த்து தெஹ்ரீக் இ இன்சாப், பிஎம்எல்-என் உள்ளிட்டவை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு வந்த ஏப்ரல் 26ல் இருந்தே பிரதமராக இருக்கும் தகுயை கிலானி இழந்துவி்ட்டார் என்று அறிவித்தனர்.

மேலும் இது குறித்து கிலானிக்கு நோட்டீஸ் அனுப்புமாறு பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
The apex court in Pakistan declared today that Yousuf Raza Gilani has been ineligible since April 26 when the court had announced the verdict in contempt case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X