For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாய்லட்டிலிருந்து பரவிய தீ - 'அப்பர் பெர்த்'தில் இருந்தவர்களே பெருமளவில் பலியான பரிதாபம்!

Google Oneindia Tamil News

Tamil Nadu Express
நெல்லூர்: சென்னை வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பது குறித்து விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய ரயில் சனிக்கிழமை இரவு டெல்லியிலிருந்து சென்னைக்குக் கிளம்பியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. நெல்லூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அப்போது ரயில் பெரும் வேகத்தில் செல்லவில்லை, மிதமான வேகத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. திடீரென தீ்ப்பிடித்துக் கொண்டதால், எஸ் 11 பெட்டியில் இருந்த பயணிகளில் விழித்துக் கொண்டோர் அவசரம் அவசரமாக அருகில் இருந்த பிற பெட்டிகளுக்கு ஓடியுள்ளனர். சிலர் ரயிலிலிருந்து குதித்துள்ளனர்.ஆனால் அப்பர் பெர்த், சைட் அப்பர் பெர்த் உள்ளிட்டவற்றில் தூங்கிக் கொண்டிருந்தோர்தான் சிக்கிக் கொண்டுள்ளனர்.

மேலும் ரயிலின் கதவுகளும் திறக்கவில்லை என்று கூறப்படுறது. அதேசமயம், தீயும் படு வேகமாக மளமளவென பரவியுள்ளது. கரும்புகையும் உள்ளே சூழ்ந்து கொண்டதால் பயணிகள் பலர் அதில் சிக்கி தீயில் கருகியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பெட்டியின் டாய்லெட் பகுதியிலிருந்துதான் தீவிபத்து ஏற்பட்டதாகவும், மின்கசிவு காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், யாராவது டாய்லெட்டுக்குள் சிகரெட் புகைத்து அதை அணைக்காமல் போட்டு விட்டதால் தீவிபத்து ஏற்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

English summary
At least 25 people were killed and several others injured when the Delhi-Chennai Tamil Nadu Express caught fire near Nellore in the early hours of Monday, officials said. Fire broke out around 4.30 am in the S11 compartment minutes after the Chennai-bound train left Nellore railway
 station in south coastal Andhra Pradesh, about 450 km from Chennai. The district collector said burning bogie was detached to prevent the fire from spreading to other compartments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X