• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பூமாலை தொடங்கி ஐபிஎல் டீம் வரை: சன் குழுமத்தின் சாதனைகள்

By Mayura Akilan
|

சென்னை: சன் டிவி குழுமம் ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணியை வாங்கியுள்ளது. இதுவரை சன் குழுமம், பத்திரிக்கை, எப்.எம்,டிவி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட ஏரியாக்களில்தான் புழங்கி வந்தது. தற்போது முதல் முறையாக விளையாட்டுத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதுவரை சன் குழுமம் கடந்து வந்த பாதைகளை சற்று திரும்பிப் பார்க்கலாம்.

வீடியோ பத்திரிக்கை பூமாலை

வீடியோ பத்திரிக்கை பூமாலை

மாறன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன் சகோதரர்கள் 18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்தனர். அதில் சினிமா செய்திகள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவைகளையும் திரைப்பட பூஜை போன்றவைகள் இடம்பெற்றன. இருந்தாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

சன் டிவியின் அதிரடி

சன் டிவியின் அதிரடி

தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தொடங்கப்பட்டது சன் டிவி. இந்த வேரிலிருந்து கிட்டத்தட்ட கேடிவி,சன்நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 30 சேனல்களை வரை தன் கைவசம் வைத்துள்ளது சன் குழுமம்.

பண்பலை வானொலி

பண்பலை வானொலி

சூரியன் எப்.எம் என்ற பண்பலை வானொலியை தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளில் ஒலிபரப்புகிறது.

பத்திரிக்கை துறையில் சன் குழுமம்

பத்திரிக்கை துறையில் சன் குழுமம்

தினகரன் என்ற காலை நாளிதழும், தமிழ்முரசு என்ற மாலை நாளிதழும் சன் குழுமத்தின் வசம் உள்ளது. குங்குமம் வார இதழ் சன் குழுமத்திடம் இருந்து வெளியாகும் முக்கியமான வார இதழாகும்.

எஸ்.சி.வி, சன் டைரக்ட்

எஸ்.சி.வி, சன் டைரக்ட்

‘எஸ்.சி.வி' எனப்படும் சுமங்கலி கேபிள் விசனை கையில் வைத்துள்ள சன் குழுமம் இல்லங்களில் நேரடியாக தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘சன் டைரக்ட்' என்ற டிடிஎச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையை 2005ம் ஆண்டு முதல் தொடங்கியுள்ளது.

திரைப்படத்துறையில் சன் குழுமம்

திரைப்படத்துறையில் சன் குழுமம்

ஊடகத்துறையில் கோலோச்சிய சன் குழுமம் திரைப்படத்துறையில் சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியது. பல திரைப்படங்களை விநியோகம் செய்த இந்நிறுவனம் முதன் முறையாக ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை தயாரித்தது.

ஸ்பைஸ் ஜெட் விமானசேவை

ஸ்பைஸ் ஜெட் விமானசேவை

ஊடகத்துறையில் மட்டுமே கோலோச்சிய சன் குழுமம் 2010ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் என்ற விமான நிறுவனத்தை வாங்கியது. அதுவரை உள்ளூரில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் முதன் முறையாக டில்லியில் இருந்து காட்மண்டுவுக்கு இயக்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் களம் இறங்கியது

விளையாட்டுத்துறையில் களம் இறங்கியது

பெரும்பாலான சேனல்களை கைவசம் வைத்திருக்கும் சன் குழுமம் இன்றைக்கு முதன் முறையாக ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணியை வாங்கியுள்ளது.

கலாநிதி மாறனின் நிர்வாகம்

கலாநிதி மாறனின் நிர்வாகம்

32 சேனல்கள், 45 எப்.எம் ரேடியோ, நாளிதழ், வார இதழ் என ஊடகத்துறையில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்வதற்கு சன்குழுமத்தின் நிறுவனர் கலாநிதிமாறன் நிர்வாகத்திறமையே சான்று என்கின்றனர் நீண்ட நாட்களாக சன் குழுமத்தை கண்காணித்து வருபவர்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Sun TV Network Limited had its humble beginnings in 'Poomalai' - a monthly video magazine. Today, it grew up to India's largest television network which, powerpacked Thirty Two TV channels and Forty Five FM Radio stations in several Indian languages in infotainment covering movies, entertainment, music, documentary and news, each carries its own distinctive content and brand personality while collectively providing audiences a range of choice.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more