For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதன்முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோசப் முர்ரே மரணம்

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உலகில் முதன்முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான டாக்டர் ஜோசப் முர்ரே காலமானார். அவருக்கு வயது 93.

அமெரிக்காவின் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் டாக்டர் ஜோசப் முர்ரே. அவர் கடந்த 1954ம் ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தார். இதன் மூலம் உலகிலேயே முதன் முதலாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் அவர் பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் உடற்கூறு குறித்த ஆய்வுகள் நடத்தினார். மருத்துவ உலகில் அவரது சாதனையை பாராட்டும் வகையில் அவருக்கு கடந்த 1990ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பாஸ்டனில் வசித்து வந்த ஜோசப்புக்கு கடந்த வியாழக்கிழமை அன்று வாதம் அடித்தது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை இறந்தார்.

அவர் அறிமுகப்படுத்திய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையால் இன்று உலகம் முழுவதும் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

English summary
Dr Joseph E. Murray, who performed the world’s first successful kidney transplant and won a Nobel Prize for his pioneering work, has died at the age of 93.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X