For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவை உலுக்கும் பனிப்புயல்! 5 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனம்!

By Mathi
Google Oneindia Tamil News

Winter Storm
நியூயார்க்: அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் 5 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக பனிப்புயல் தாக்கி வருகிற்து. அங்கு மணிக்கு 56 கிலோ மீட்டர் முதல் 64 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியது. இதனால் நியூயார்க், பாஸ்டன், கனெக்டிகட், மியாமி நகரங்களில் பல அடிகள் உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன.

பாஸ்டனில் 30 அங்குலமும், நியூயார்க்கின் சில பகுதிகளில் 12 அங்குலமும் பனி கொட்டும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 5 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 5 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. அணுமின்நிலையமும் மூடப்பட்டிருக்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.

மேலும் இந்த பனிப்புயலினால் வெள்ள அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில்தான் சாண்டி புயல் அமெரிக்காவை படாதபாடு படுத்தியது. தற்போது பனிப்புயல் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

English summary
A blizzard pummeled the Northeastern United States, killing at least one person, leaving hundreds of thousands without power and disrupting thousands of flights, media and officials said. Forecasters warned of more heavy winds and snowfalls on Saturday, particularly near Boston, where up to 30 inches (76 cm) was expected in some areas, as well as in New York, Connecticut an
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X