For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டுவெடிக்கும் என்று 2 நாட்களுக்கு முன்பே தெரியும் என்கிறார் ஷிண்டே

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Sushil Kumar Shinde
டெல்லி: குண்டுவெடிப்புச் சம்பவம் நடக்கும் என்று 2 நாட்களுக்கு முன்பே உளவுத்துறை தகவல்கள் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

ஆனால் எங்கு எப்போது நடக்கும் என்பது குறித்து குறிப்பிட்ட தகவல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஹைதராபாத் குண்டுவெடிப்பு குறித்து அவர் கூறுகையில், பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் இந்த குண்டுவெடிப்பு குறித்த உளவுத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது.

ஆனால் எங்கு குண்டுவெடிப்பு நடக்கும் என்பது குறித்து குறிப்பிட்ட தகவல் ஏதும் இல்லை என்றார் அவர்.

மேலும் அவர் கூறுகையில், இந்த தாக்குதலுக்கும், எம்.ஐ.எம். தலைவர் அக்பருதின் ஓவைசியின் கைதுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால், எனக்கு அப்படி தோன்றவில்லை. சம்பவ இடத்துக்கு அருகே உள்ள கோகுல்சாட் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு குண்டு வெடித்தது. இது அதேபோன்று இருப்பதாக ஆந்திர முதல்வர் கூறினார். குண்டு வெடிப்பு பற்றி பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

English summary
Home Minister Sushil Kumar Shinde said after the Hyderabad blasts on Thursday evening that the government had some intelligence inputs about a possible terror attack for the last few days, but no specific details.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X