For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜபக்சே, சாமி சந்திப்பு எதிரொலி: மதுரையில் ஜனதா கட்சி அலுவகம் மீது தாக்குதல்

By Siva
Google Oneindia Tamil News

Mob attacks Janata party office in Madurai
மதுரை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி சந்தித்ததின் எதிரொலியாக மதுரையில் உள்ள அவரது கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது.

ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிம் சாமி கடந்த 28ம் தேதி கொழும்பு சென்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபயா ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல் ஓங்கி ஒலிக்கையில் சாமியின் செயல் பலரை எரிச்சல் அடைய வைத்துள்ளது. இந்நிலையில் மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஜனதா கட்சி அலுவலகத்தை சுமார் 35 பேர் கொண்ட கும்பல் கல் வீசித் தாக்கியது. இந்த தாக்குதலில் கட்சி அலுவலகத்தின் பெயர் பலகை சேதம் அடைந்தது.

தாக்குதல் நடத்திய கும்பலில் மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் சிலரும் அடக்கம் என்று கூறப்படுகிறது.

ராஜபக்சேவை கண்டித்து ரயில் மறியல்:

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சிதம்பரம் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ரயில் மறியல் செய்தனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் மாணவர்கள் இன்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். மாணவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு சோழன் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

English summary
A 35 member gang attacked the Janata party office in Madurai. Janata party chief Subramaniam Swamy's meeting with Sri Lankan president Mahinda Rajapakse irked the Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X