For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.5.10 கோடிக்கு ஏலம்

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: மாவீரன் நெப்போலியன் ஜோசபினுக்கு போட்ட நிச்சயதார்த்த மோதிரம் ரூ.51,597,125க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1776ம் ஆண்டு மாவீரன் நெப்போலியன் இளைஞனாக இருக்கையில் தான் விரும்பிய ஜோசபினுக்கு இரண்டு கற்கள் பதித்த நிச்சயதார்த்த மோதிரத்தை அணிவித்தார். தலைமுறை தலைமுறையாக பாதுகாக்கப்பட்ட அந்த மோதிரம் ஜோசபினின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு ஏலத்தில் விடப்பட்டது.

இரண்டு கல் மோதிரம்

இரண்டு கல் மோதிரம்

நெப்போலியனிடம் அப்போது காசு இல்லாததால் வெறும் இரண்டு கல் வைத்த மோதிரத்தை ஜோசபினுக்கு போட்டுள்ளார். மோதிரம் போட்டபோது நெப்போலியன் பிரான்ஸ் மன்னர் கிடையாது. இந்த மோதிரத்தில் ஒரு நீலக் கல் மற்றும் ஒரு வைரக் கல் உள்ளது.

பொக்கிஷமாக பாதுகாத்த ஜோசபின்

பொக்கிஷமாக பாதுகாத்த ஜோசபின்

நெப்போலியனும், ஜோசபினும் திருமணமாகி 14 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்துவிட்டனர். இருப்பினும் ஜோசபின் அந்த மோதிரத்தை பொக்கிஷமாக வைத்திருந்ததுடன் அடுத்த தலைமுறையினரும் அதை பாதுகாத்து வந்துள்ளனர்.

ரூ.5 கோடிக்கு மேல் ஏலத்தில் போன மோதிரம்

ரூ.5 கோடிக்கு மேல் ஏலத்தில் போன மோதிரம்

ஜோசபினின் மோதிரம் ரூ.1,087,399க்கு ஏலத்தில் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது ரூ.51,597,125க்கு ஏலத்தில் சென்றுள்ளது. அதாவது எதிர்பார்த்த தொகையைவிட 47 மடங்கு அதிகமாக கிடைத்துள்ளது.

English summary
Pear shaped diamond and a saphhire studded engagement ring given by Napoleon Bonaparte to Josephine has been sold at auction for Rs. 51,597,125.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X