For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனைத்து துறைகளிலும் இந்திய பணியாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய பயணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இலங்கையின் முதலீட்டு சபையிடம் இந்திய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துதை நிறுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருக்கிறது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், கட்டுமானத் திட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, அவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்ற பணியாளர்களை இலங்கை அரசாங்கம் பணியில் ஈடுபடுத்த இருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனத்தின் படியே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கட்டுமானத் திட்டங்களில் இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அடுத்து வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இந்தியப் பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது கணிசமாகக் குறைக்கப்படும். கொழும்பு டாக்யார்ட் நிறுவனத்தில் சுமார் 800 இந்தியப் பணியாளர்களும், உருக்கு தொழிற்சாலைகளில் 1500க்கும் அதிகமான இந்தியப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களுக்குப் பதிலாக உள்நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்படவுள்ளனர்.

முதலீட்டுத் திட்டங்களுக்கு, இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதைக் குறைக்கும்படி, இலங்கை முதலீட்டுச் சபைக்கு இலங்கை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது என்றார் அவர்.

English summary
Sri Lanka Labour Minister Gamini Lokuge said that a number of skilled workers in the country will be replaced with nationals according to the new policy decision taken by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X